மழைக்காலத்தில் ஏதாவது சூடாக செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அதற்கு அட்டகாசமான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தான் பன்னீர் 65. இந்த பன்னீர் 65 செய்வது மிக சுலபம் அதே சமயம் சுவை நிறைந்ததாக இருக்கும். பன்னீரை விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் நீங்கள் பன்னீர் 65 ஆக செய்து கொடுக்கலாம். இதனை ஸ்நாக்ஸ் ஆக மட்டும் இல்லாமல் சைடு டிஷ் ஆகவும் சாப்பிட்டு ருசித்து மகிழலாம். வாருங்கள் சுவையான பன்னீர் 65 எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
வாவ்… அருமையான சுவை நிறைந்த பாலக் பன்னீர்…! இப்படி செய்து பாருங்கள்..
பன்னீர் 65 செய்வதற்கு முதலில் இதற்கான மாவை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு பௌலில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கான் ஃபிளார், இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு, கால் ஸ்பூனிற்கும் குறைவாக மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். இப்பொழுது சிறிதளவு கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் காரத்திற்கு ஏற்ப கொஞ்சமாக மிளகுத்தூளும் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக அரை மூடி எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விட வேண்டும். அனைத்தையும் நன்கு கலந்த பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும். அதிக தண்ணீராக கரைத்து விடக்கூடாது.
இப்பொழுது 200 கிராம் அளவு பன்னீரை எடுத்து அதனை சதுர வடிவில் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய பன்னீரை நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து பன்னீர் முழுவதும் மாவு ஒட்டும் படியாக புரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் பன்னீர் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பன்னீரை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பன்னீரை அதிக நேரம் பொறிக்கக் கூடாது. அப்படி பொறித்தால் உள்ளே இருக்கும் பன்னீர் கடினமாகிவிடும் எனவே வெளிமாவு மட்டும் சிவந்த பிறகு எடுத்து விடலாம். இதனை பொறித்து எடுத்த பிறகு சூடாக பரிமாறவும் அவ்வளவுதான் சுவையான பன்னீர் 65 தயார்.