மறந்து போன கிராமத்து பாரம்பரிய பாட்டி பலகாரம்! நம் வீட்டில் நொடியில் செய்வதற்கான ரெசிபி இதோ…

இன்றைய வாழ்க்கை முறையில் பலவிதமான இனிப்பு வகைகள் நம் வீட்டில் நொடியில் தயார் செய்தாலும் பாரம்பரிய முறையில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு தனி மவுசுதான். அதுவும் விடுமுறை நாட்களில் நாம் நம் பாட்டி – தாத்தா வீடுகளுக்கு செல்லும் பொழுது மாலை நேரங்களில் அவர்கள் செய்து கொடுக்கும் பலகாரங்கள் நாவை விட்டு சுவை நகலாத வண்ணம் அப்படியே இருக்கும். எந்த வகையில் சுவையில் எந்த மாற்றமும் இல்லாமல் பாட்டியின் அதே கைவண்ணத்தில் தித்திப்பான பலகாரம் ஒன்று செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து உருகியதும் இரண்டு கப் அளவு துருவிய தேங்காய் சேர்த்து நெய்யோடு கலந்து வதக்க வேண்டும். தேங்காயின் ஈரப்பதம் செல்லும் வரை நன்கு வதக்கிக் கொண்டால் போதுமானது. இரண்டு கப் தேங்காய்க்கு ஒரு கப் அளவு பொட்டுக்கடலை என்பது கணக்கு.

அதன்படி ஒரு கப் பொட்டுக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்று இரண்டாக பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் தேங்காய் நன்கு பொன்னிறமாக வதங்கிவிடும். அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து தேங்காயுடன் இணைய வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் உடைத்து வைத்திருக்கும் பொரிகடலையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் அடுப்பில் அப்படி வைத்து விட்டு மற்றொரு அடுப்பின் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி கசகசா, 2 தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த இந்த பொருட்களை மீண்டும் அதே கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக வாசனைக்கு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளரி கொடுத்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது கடாயில் உள்ள பொருட்கள் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் பொழுது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு செவ்வாழைப் பழம் வைத்து அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ்!

மற்றொரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர், முக்கால் கப் அளவிற்கு மைதா மாவு கலந்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் தயார் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மைதா மாவில் ஒரு முறை நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உருண்டைகளை மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பலகாரம் பார்ப்பதற்கு பணியாரம் போல இருந்தாலும் உள்ளே பூரணங்கள் வைத்து மிகவும் தித்திப்பாக சுவையாகவும் இருக்கும்.

Exit mobile version