பச்சை சுண்டைக்காய் வைத்து அருமையான காரக்குழம்பு!

பல விதமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட சுண்டைக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்ற மிகவும் உதவியாக உள்ளது. மேலும் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை சரி செய்து உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறது. எத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டக்காயை நம் வாரத்தில் இருமுறையாவது நம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சை சுண்டைக்காய் வைத்து காரசாரமான கார குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…


ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இதில் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன் பின் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருவேப்பிலை நன்கு பொரிந்ததும் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் 10 முதல் 15 வெள்ளை பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெள்ளை பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் இரண்டு நன்கு பழுத்த தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வதக்க வேண்டும். தக்காளி பழம் எண்ணெயோடு சேர்ந்து ஒரு நிமிடம் வதங்கியதும் ஒரு கப் சுண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் இரண்டு முதல் இன்று நிமிடம் வரை சுண்டைக்காயை வதக்க வேண்டும்.

இதற்கு பதிலாக ஒரு கடாயில் ஒரு கப் சுண்டைக்காய் தனியாக ஒரு தேக்கரண்டி எண்ணெயில் பொன்னிறமாக மாறும்வரை வறுத்தெடுத்துக் கொள்ளலாம். இந்த முறைப்படி சுண்டைக்காயை வறுத்தெடுத்த பின் தக்காளி நன்கு வதங்கியதும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வயிறு உப்பசம், அஜீரண கோளாரா… வாங்க வீட்டிலேயே எலுமிச்சை ரசம் செய்யலாம்!

இப்பொழுது அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கல்லுப்பு, நான்கு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயோடு நன்கு வதக்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

மிதமான தீயில் குறைந்தது 7 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பச்சை சுண்டைக்காய் குழம்பு தயார். சூடான சாதத்துடன் இந்த குழம்பு வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version