சிக்கன், மட்டன் சுவையுடன் போட்டி போடும் அளவிற்கு சுவையான காரசாரமான சோயா சங்க்ஸ்!

வெள்ளி, செவ்வாய், கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகள் தவிர்ப்பது வழக்கம். அந்த நேரத்தில் அசைவம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறதா.. சிக்கன் மட்டன் சுவையில் சோயா வைத்து அருமையான சோயா சங்க்ஸ் செய்து சாப்பிடலாம் வாங்க….
சாப்பிடுவதற்கு மிருதுவாகவும், அருமையான காரசாரத்துடன் இருக்கும் இந்த சோயா சங்க்ஸ் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…..

சோயா சங்க்ஸ் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தேவையான அளவு சோயாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஊற வைக்க வேண்டும். தண்ணீரில் ஊற வைக்கும் பொழுது அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து ஊற வைத்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு , இரண்டு துண்டு பட்டை, ஒரு சிறிய துண்டு கல்பாசி சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், பட்டை இரண்டு, முந்திரி பருப்பு 10, ஒரு அண்ணாச்சி பூ சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு காய்ந்த வத்தல் சேர்த்து வதக்க வேண்டும்.
காய்ந்த வத்தலின் நெடி குறைந்ததும் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நம் தயார் செய்து வைத்திருக்கும் பொடியை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் வெந்நீரில் ஊற வைத்திருக்கும் சோயாவை பிழிந்து எடுத்து கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். இந்த நேரத்தில் கடாயில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு மசாலாக்களுடன் சோயா கலந்து வரும்படி கலந்து கொள்ள வேண்டும்.

கிழங்கே இல்லாமல் அருமையான உருளைக்கிழங்கு மசாலா… சப்பாத்தி மற்றும் பூரிக்கு அசத்தலான சைட்ஷ்….

மிதமான தீயில் இந்த கலவையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். தண்ணீர் வற்றி கெட்டியாக மாறினால் சோயா சங்க்ஸ் தயார். இதை சூடான சாதம் அல்லது தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என வெரைட்டி ரைஸ்க்களுடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.
சிக்கன், மட்டன் என அசைவ உணவுகளின் அதே சுவையில் சைவ சோயா சங்க்ஸ் தயார்.

Exit mobile version