எதுவும் அரைக்க தேவையில்லை… வறுக்க தேவை இல்லை… பத்து நிமிடத்தில் குக்கரில் சோயா கறி.. ரெசிபி இதோ….

சமைக்க பலருக்கு ஆசை இருந்தாலும் அதற்காக முறையாக காய்கறிகளை நறுக்குவது, சில பொருட்களை அரைத்து விழுதுகள் தயார் செய்வது என அடுத்தடுத்து வேலை செய்யும் பொழுது சமையலின் மீது உள்ள ஆர்வம் சில நேரங்களில் குறைந்து விடுகிறது. எந்த பொருளையும் அரைக்காமல் எளிமையான முறையில் சில நிமிடங்களில் சமைக்க அனைவருக்கும் ஆசைதான். அந்த வகையில் அரைக்க தேவையில்லை பத்தே நிமிடத்தில் குக்கரில் சோயா கறி தயார். இந்த சோயா கறி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் இரண்டு கப் சோயாவை கொதிக்கும் தண்ணீர் உடன் சேர்த்து பத்து நிமிடம் முடி போட்டு அப்படியே வைக்க வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து சோயாவில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை பிழிந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். அடுத்து ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நாம் பிழிந்து வைத்திருக்கும் மீல் மேக்கரை குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும். மீல் மேக்கரில் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி நன்கு உதிரியாக வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நன்கு வதக்கிய மீல் மேக்கரை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு பிரியாணி இலை, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை நீளவாக்கில் நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி வதங்குவதற்காக அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் கொடுக்க வேண்டுமா? கேழ்வரகு மாவு கார கொழுக்கட்டை… ரெசிபி இதோ..

தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக அரை தேக்கரண்டி சீரகத்தூள், இரண்டு தேக்கரண்டி மல்லித்தூள், ஒன்றரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் அடக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த மசாலாக்களில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடி இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.இரண்டு விசில்கள் வந்ததன் பின் அழுத்தம் குறைந்த உடன் குக்கரை திறந்து நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். அதன் பின் நாம் ஊற வைத்திருக்கும் சோயாவை கலவையுடன் சேர்த்து நன்கு கிளரி கொடுக்க வேண்டும்.

மிதமான தீயில் இந்த கலவையை ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான சோயா கறி தயார்.

இந்த சோயா கறி சூடான சாதம் மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version