புற்றுநோய் நோய் வருவதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நீர்ச்சத்து நிறைந்த சுரக்காய் வைத்து அருமையான சாதம் ரெசிபி!

பல நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொழுது நாம் எளிமையாக நோய்வாய் படுவதில் இருந்து விடுபட முடியும். அந்த வகையில் புற்றுநோய் மற்றும் பலவிதமான நோய் தாக்குதலில் இருந்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நீர்ச்சத்து நிறைந்த சுரக்காய் வைத்து அருமையான சாதம் செய்வதற்கான ரெசிபி இதோ… இந்த சாதத்தை நாம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸுக்கு கூட செய்து கொடுத்து விடலாம்.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கினால் போதும். அடுத்து கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் ஒன்றரை கப் சுரைக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுரக்காயில் அதிகப்படியாக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இருப்பதால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் எதிர்பார்க்கலையும் கொடுக்கிறது.

சுரைக்காயை எண்ணையோடு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். வதக்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக மூடி போட்டு சுரக்காயை ஏழு முதல் எட்டு நிமிடம் வரை நன்கு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

எட்டு நிமிடம் கழித்து சுரக்காய் வந்துள்ளதா என சரி பார்த்துக் கொள்ள வேண்டும். சுரக்காய் நன்கு வந்துள்ளதை உறுதிப்படுத்திய பிறகு இதில் தேவையான மசாலாக்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள பித்தத்தை குறைத்து, பசி உணர்வை தூண்டும் காரசாரமான தொக்கு ரெசிபி இதோ!

இந்த மசாலாவை ஒரு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். அப்பொழுது மசாலாவின் காரம் சுரைக்காய் சேர்த்து விடும். இப்பொழுது தொக்கு தயாராக உள்ளது. இதில் சூடான சாதத்தை சேர்த்து கிளறினால் சுரைக்காய் சாதம் தயார்.

இந்த சாதத்தில் இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய், கைப்பிடி அளவு நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறினாள் சுவையாகவும் வாசமாகவும் இருக்கும்.

Exit mobile version