ஷீர் குருமா மிலாடி நபிக்கு அருமையான ஒரு இனிப்பு வகை! இதை செஞ்சு அசத்திடுங்க!

ஷீர் குருமா என்பது பாயசம் போன்ற ஒரு வகையான இனிப்பு ஆகும். இது பெரும்பாலும் ரம்ஜான், மிலாடி நபி போன்ற பண்டிகைகளில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை. பாலோடு சேமியா, பேரிச்சை, மற்ற நட்ஸ் வகைகளை சேர்த்து செய்யக்கூடிய இந்த ஷீர் குருமா சுவை நிறைந்ததாக இருக்கும். இந்த இனிப்பு வகையை சாதாரண நாட்களிலும் செய்து குழந்தைகளுக்கு பருக கொடுக்கலாம். குழந்தைகள் இதனை விரும்பி உண்பார்கள். சுவை நிறைந்த இந்த ஷீர் குருமாவை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

வாழைப்பழத்தில் இந்த ஸ்மூத்தி செஞ்சு கொடுங்க ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க… குழந்தைகளுக்கு சத்தான சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி!

ஷீர் குருமா செய்வதற்கு முதலில் கால் கப் அளவு சேமியாவை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். சேமியா பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். வறுத்த சேமியாவை தனியாக எடுத்து வைத்து விடலாம் இப்பொழுது அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். பத்து பேரிச்சம் பழங்களை விதை நீக்கி பொடியாக நறுக்கி நெய்யில் சேர்த்து குறைந்தது மூன்று நிமிடங்கள் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பேரிச்சம் பழத்தை தனியாக வைத்துவிடலாம்.

இப்பொழுது அதே கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து கால் கப் பொடியாக நறுக்கிய முந்திரி, கால் கப் பொடியாக நறுக்கிய பாதாம், இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு சாரைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். குறைந்தது நான்கு நிமிடங்கள் வரை இதனை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து 15 உலர் திராட்சைகளை நன்கு வறுக்கவும். உலர் திராட்சைகள் பொரிந்து உப்பி வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்த்து பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் காய்ச்சிய பிறகு இதனுடன் வறுத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். சேமியா நன்கு வெந்த பிறகு கால் கப் சீனி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சீனி நன்கு கரைந்ததும் வறுத்து வைத்திருக்கும் பேரிச்சை, முந்திரி, பாதாம் பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

அவலை வைத்து அருமையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலான அவல் பாயசம்!

அனைத்தும் கலந்து பால் சற்று வற்றியதும் இதனை இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவை நிறைந்த ஷீர் குருமா தயாராகி விட்டது. இதனை சூடாகவோ அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.

Exit mobile version