இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஸ்பெஷல் பிரசாத ரெசிபிகள்!

ஒவ்வொரு ஆண்டும் நம் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மிகவும் பிரசித்தியாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. இந்த விசேஷ நாட்களில் கடவுளை வழிபடும் பொழுது பிரசாதங்கள் வைத்து பலகாரங்கள் செய்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பூஜா நாட்களை அருமையான பிரசாதம் செய்து சிறப்பாக வழிபடுவதற்கு எளிமையான பிரசாத ரெசிபிகள் விளக்கம் இதோ…

கோவில் சுவையில் அருமையான சர்க்கரை பொங்கல் நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபி இதோ..

முதலில் பாசிப்பருப்பை 1/4 கப் எடுத்து கடாயில் சேர்த்து நெய்யோடு நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கால் கப் பாசிப்பருப்பிற்கு ஒரு கப் வீதம் பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்கு கழுவி ஒரு முறை சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசி மற்றும் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிதமான தீயில் மூன்று முதல் ஐந்து விசில்கள் வேக வைத்துக் கொள்ளவும்.

அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் இரண்டு கப் வெல்லம் சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் கலந்து கொள்ளவும். மிதமான தீயில் வெல்லத்தை கொதிக்க விட வேண்டும். குக்கரில் இருந்து ஐந்து விசில்கள் வந்த பின்பு அரிசி மற்றும் பருப்பை மீண்டும் ஒருமுறை நன்கு மசித்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் நாம் கொதிக்க வைத்திருக்கும் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

வெல்லப்பாகுவுடன் இணைந்து அரிசி மற்றும் பருப்பு ஒரு சேர கொதிக்கும் பொழுது அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

இதுவரை சாப்பிடாத அசத்தல் சுவையின் ரெஸ்டாரண்ட் தரத்தில் மஷ்ரூம் 65 கிரேவி!

இறுதியாக கெட்டிப் பதத்திற்கு வரும் நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக மீண்டும் ஒருமுறை நன்கு கிளறி இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார். இந்த சர்க்கரை பொங்கல் மேலும் சுவையாக வர வேண்டும் என நினைத்தால் அரிசி மற்றும் பருப்பை தண்ணீர் சேர்த்து வேக வைக்காமல் ஒரு கப் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

அதேபோல் நெய்யில் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சையுடன் ஒரு கப் தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கி சேர்க்கும் பொழுது சர்க்கரை பொங்கல் மேலும் திட்டிப்பாக இருக்கும். ஒரு முறை இந்த ரெசிபியை பயன்படுத்தி நம் வீட்டு விசேஷ நாட்களில் கடவுளுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் செய்து வழிபடலாம்.

Exit mobile version