வாழைக்காயை அடுத்த முறை இப்படி பொடிமாஸ் செய்து பாருங்கள்… சுவையான வாழைக்காய் பொடிமாஸ்!

காரசாரமான குழம்பு வகைகளுக்கு சைட் டிஷ் ஆக கொஞ்சம் காரம் குறைவான அதேசமயம் சுவை நிறைந்த ஒரு ரெசிபி தான் நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும். இதற்கு பலரது தேர்வும் பொடிமாஸ் வகைகள் தான். அதுவும் குறிப்பாக வாழைக்காய் வைத்து செய்யும் பொடிமாஸ் காரக்குழம்பு, பூண்டு குழம்பு, மிளகு குழம்பு என அனைத்து வகையான குழம்பு வகைகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். வாருங்கள் வாழைக்காய் வைத்து பொடிமாஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ஐந்தே நிமிடத்தில் அசத்தலாய் செய்யலாம் அவல் வடை! சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ்..

வாழைக்காய் பொடிமாஸ் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சூடானதும் அதில் மூன்று வாழைக்காய்களின் மேற்பகுதியும் அடிப்புரத்தையும் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதை மூடி போட்டு 10 நிமிடங்கள் நன்கு வேக விடவும். வாழைக்காய் நன்கு வெந்து மென்மையானதும் அதனை எடுத்து ஆற வைத்து விடவும். வாழைக்காய் நன்கு ஆறியதும் அதன் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது தோல் நீக்கிய வாழைக்காயை கேரட் துருவும் துருவியில் நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் சிறிதளவு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு எண்ணெயில் வறுத்த பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் பத்தை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் ஏற்கனவே துருவி வைத்திருக்கும் வாழைக்காய் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைக்காய் நன்கு வதங்கியதும் துருவிய தேங்காய் நான்கு டேபிள் ஸ்பூன் சேர்த்து இதனை ஒரு கிளறு கிளறி இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயாராகி விட்டது.

Exit mobile version