கிராமத்து ஸ்டைலில் சூப்பரான உப்பு கறி… ஒரு முறை செய்தால் திரும்பத் திரும்ப செய்வீர்கள்!!

சிக்கன் வாங்கினால் வழக்கமாக செய்யும் குழம்பு அல்லது கிரேவி போன்று இல்லாமல் கிராமத்து பாணியில் எளிமையான பொருட்களைக் கொண்டு சுவையான உப்பு கறி செய்து பாருங்கள். இந்த உப்பு கறியை ஒரு முறை ருசித்தால் திரும்பத் திரும்ப செய்யத் தோன்றும். இதை செய்ய அதிக பொருட்கள் தேவையில்லை. மசாலாக்கள் அரைக்கும் வேலையும் இல்லை. குறைவான நேரத்தில் எளிமையாக செய்யலாம் ஆனாலும் சுவை அலாதியாக இருக்கும்.

மீனை வைத்து இப்படி ஒரு ரெசிபியா? கேரளா ஸ்டைலில் சூப்பரான மீன் பொழிச்சது!!!

இதற்கு 500 கிராம் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். 100 கிராம் சின்ன வெங்காயம், 10 வர மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக பிய்த்து வைத்திருக்கும் வர மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.

இவை நன்கு வதங்கியதும் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது சுத்தம் செய்து வைத்த அரை கிலோ கோழிக்கறியை இதனுடன் சேர்த்து வதக்கவும். உப்புக் கறி செய்யும் பொழுது கறியானது எண்ணெயிலேயே வேக விட வேண்டும் இதனை நன்கு வதக்கி சிறிது நேரம் மூடி போட்டு வேக விட வேண்டும்.

இப்பொழுது கல் உப்பை ஒரு கை அளவு தண்ணீரில் கரைத்து உப்பு தண்ணீரை கோழிக்கறியின் மீது தெளித்து விட வேண்டும். கறி நன்கு வந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து 1 ஸ்பூன் மிளகுத்தூளை தூவி விட வேண்டும். ஒரு ஸ்பூன் எண்ணெயை மீண்டும் கறியை சுற்றி ஊற்றிவிட்டு நன்கு கிளறி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

இறால் வைத்து அருமையான இறால் தவா ஃப்ரை… இந்த இறால் தவா ஃப்ரை முயற்சி செய்து பாருங்கள்!!

அவ்வளவுதான் சுவையான உப்புக் கறி தயாராகிவிடும்!!!

Exit mobile version