இந்த சூப்பை ஒருமுறை செய்து பாருங்க பிறகு அடிக்கடி செய்யச் சொல்லி கேட்பாங்க… தக்காளி பல்ப் சூப்!

பலருக்கும் அவ்வப்போது சூடாக தேநீர் அல்லது காபி அடிக்கடி பருக வேண்டும் என்று தோன்றும். ஆனால் அடிக்கடி இவற்றை பருகுவது உடல் நலனுக்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக ஏதேனும் சூப்பை சூடாக பருகலாம். சூடாக ஏதேனும் சூப் குடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தக்காளி பல்ப் சூப்பை முயற்சி செய்து பார்க்கலாம். இதன் சுவை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். தேனீருக்கு பதிலாகவோ அல்லது உணவின் பொழுதோ இந்த சூப்பை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு தக்காளி மற்றும் பூண்டு இருந்தால் போதும் அருமையாக இந்த தக்காளி பல்ப் சூப்பை தயார் செய்து விடலாம். இந்த சூப் செய்வதும் மிக மிக சுலபம். எளிமையாக எப்படி இந்த தக்காளி பல்‌ப் சூப்பை செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தக்காளி பல்ப் சூப் செய்வதற்கு முதலில் ஐந்து அல்லது ஆறு நன்கு பழுத்த தக்காளிகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தக்காளி வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். தக்காளி வெந்து தோல் வெடித்து வரும் பொழுது அடுப்பை நிறுத்தி விடவும். வேகவைத்த தக்காளிகளை இப்பொழுது தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும். தக்காளி ஆறியதும் அதன் தோலினை உரித்து உள்ளிருக்கும் பல்பை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்து எடுத்த தக்காளி பல்ப் மற்றும் நான்கு பல் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதை தக்காளி வேகவைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இது கெட்டியாக வரும் பொழுது அரை ஸ்பூன் மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இறுதியில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இறக்க வேண்டும்.

பிரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொஞ்சமாக நெய்யில் வறுத்து சூப்பை பரிமாறுவதற்கு முன்பு சூப்பில் போட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவை நிறைந்த தக்காளி பல்ப் சூப் தயார்.

Exit mobile version