ஈஸியா செய்யலாம் பன்னீர் மசாலா தோசை.. வீட்டில் உள்ளோர் வியந்து பாராட்டுவாங்க…!

பன்னீர் வைத்து செய்யும் ரெசிபிக்கள் அத்தனையுமே சுவை நிறைந்தது தான். இந்த பன்னீரை வைத்து அனைவருக்கும் பிடித்தமான தோசையில் பன்னீர் மசாலா தோசை சூப்பராக செய்யலாம். வழக்கமான மசால் தோசை போல இல்லாமல் இந்த பன்னீர் மசாலா தோசை அட்டகாசமான சுவையுடன் இருக்கும். இதற்கு சைட் டிஷ் ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். வாருங்கள் சுவை நிறைந்த பன்னீர் மசாலா தோசை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சுவையான பேபி கார்ன் மசாலா.. உணவகங்களில் கிடைக்கும் சுவையில் இப்படி செய்து பாருங்கள்…!

பன்னீர் மசாலா தோசை செய்வதற்கு முதலில் 150 கிராம் பன்னீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கேரட் துருவும் துருவியில் நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். துருவி எடுத்த பன்னீரில் சிறிதளவை மட்டும் எடுத்து தனியாக ஒரு பவுலில் சேர்க்கவும். இப்பொழுது தனியாக எடுத்து வைத்த பன்னீருடன் பொடியாக நீளவாக்கில் நறுக்கிய பாதி வெங்காயம், ஒரு சிறிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்க்கவும். இதற்கு சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து இதை நன்றாக கலந்து தனியாக வைத்துவிடலாம்.

இப்பொழுது ஒரு பேனில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயத்தை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும்.பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அதையும் வதக்கி கொள்ள வேண்டும்.தக்காளி வெங்காயம் மென்மையாக வதங்கியதும் இதற்கு தேவையான மசாலாக்களை சேர்க்கலாம்.

தோசை பிரியரா நீங்கள்? இதோ உங்களுக்காக மணமணக்கும் மசால் தோசை…!

கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக துருவி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து இதனை நன்றாக கிளறி விட வேண்டும். இப்பொழுது நாம் வழக்கமாக ஊற்றும் தோசை மாவில் ஊத்தப்பம் போல தோசை ஊற்றி அதில் நாம் செய்து வைத்திருக்கும் பன்னீர் மசாலாவை சேர்க்க வேண்டும். இதன் மேல் நம் தனியாக எடுத்து வைத்த துருவிய பன்னீர் மற்றும் வெங்காயத்தை தூவி விட வேண்டும். ஒரு புறம் சிவந்ததும் திருப்பி போட்டு மறுபுறமும் வேகவிட்டு எடுத்தால் அட்டகாசமான பன்னீர் மசாலா தோசை தயார். இதனை ரோஸ்ட் போலவும் ஊற்றி எடுக்கலாம்.

Exit mobile version