மாலை நேரத்தில் சூடா செய்து சாப்பிடுங்கள் சுவையான காளான் பக்கோடா…!

மாலை நேரம் பலருக்கும் தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் இல்லை என்றால் முழுமை அடையாது. கடைகளில் வாங்கும் ஸ்நாக்ஸ்களை விட வீட்டிலேயே செய்து சாப்பிடும் சிற்றுண்டி வகைகளை தான் பலரும் விரும்புவார்கள். அப்படி வீட்டிலேயே செய்து சாப்பிடும் வகையில் எளிமையான அதே சமயம் சுவை நிறைந்த ஒரு மாலை நேர சிற்றுண்டி வகைதான் காளான் பக்கோடா. இந்த காளான் பக்கோடா செய்வதற்கு மிக எளிமையானது. அதே சமயம் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இந்த காளான் பக்கோடா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தீபாவளிக்கு மொறுமொறு ஸ்னாக்ஸ் சுவையான ரிப்பன் பக்கோடா…! சுலபமாக செய்வது எப்படி?

காளான் பக்கோடா செய்வதற்கு 1/4 கிலோ அளவு காளானை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதில் ஈரப்பதம் ஏதும் இல்லாதவாறு ஒரு டிஷ்யூவை வைத்து நன்றாக துடைத்து விடவும். பிறகு காளானை துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் சேர்க்கவும். பிறகு பௌலில் சேர்த்த காளானுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், அரை ஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி விழுது, நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கப் அளவிற்கு கடலை மாவு, கால் கப் அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். காரத்திற்கு ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. காளான் மற்றும் வெங்காயத்திலிருந்து தண்ணீர் வெளிவரும் எனவே தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் லேசாக தண்ணீரை தெளித்துக் கொள்ளலாம். காளானை செய்யத் தொடங்கும் போதே பக்கோடா பொரிக்க தேவையான அளவு எண்ணெயை சூடு செய்து கொள்ளவும். மசாலாக்கள் சேர்த்த பிறகு இதனை நீண்ட நேரம் வைத்திருந்தால் மிகவும் தண்ணீர் விட்டு விடும். எண்ணெய் சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் காளானை சேர்த்து பொரிக்கத் தொடங்கவும். மிதமான தீயில் வைத்து காளான் நன்கு பொரிந்து சிவந்து வந்ததும் எடுத்து விடலாம். இதனை சூடாக தேநீருடன் பரிமாறலாம். அவ்வளவுதான் அட்டகாசமான காளான் பக்கோடா தயார்.

Exit mobile version