மூன்று முட்டை இருந்தால் போதும் சூப்பரான புட்டிங் இப்படி செய்து பாருங்கள்…!

முட்டை வைத்து சுவையான வாயில் வைத்ததும் கரையக்கூடிய அருமையான புட்டிங் செய்யலாம். இதை செய்வதற்கு அதிகமான பொருட்கள் தேவையில்லை குறைவான பொருட்கள் இருந்தால் போதும். இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும். ஒருமுறை இதனை உங்கள் வீட்டில் செய்து கொடுத்தால் போதும் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள் வாருங்கள் மென்மையான இந்த முட்டை புட்டிங் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இதற்கு ஒரு பவுலில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும் அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும் இதனை ஒரு விஸ்க் வைத்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். முட்டை மற்றும் சர்க்கரையை நன்றாக அடித்ததும் இதில் இரண்டு பின்ச் அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும் இதையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும் பிறகு காய்ச்சி ஆற வைத்த பால் ஒரு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து விடவும்.

புத்தாண்டுக்கு வித்தியாசமாக செய்து பாருங்கள் வாயில் வைத்ததும் கரையும் கேரட் டிலைட்..!

இப்பொழுது ஒரு பவுலின் உள்பக்கம் நெய் தடவிக் கொள்ள வேண்டும் நெய் தடவிய பிறகு நாம் கலந்து வைத்திருக்கும் கலவையை அதில் ஊற்றவும். இதனை ஒரு மூடியால் நன்றாக மூடி வைக்க வேண்டும் அல்லது அலுமினிய ஃபாயில் வைத்து நன்றாக சுற்றி விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும் தண்ணீர் நன்கு கொதித்ததும் அதனால் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பவுலை வைக்கவும் பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 40 நிமிடங்கள் வைக்கவும்.

40 நிமிடங்கள் ஆன பிறகு அடுப்பை அணைத்து பவுலை தனியாக வைத்து விடலாம் இதனை முழுமையாக ஆறவிட வேண்டும் முழுமையாக ஆரிய பிறகு இதனை துண்டு போட்டு பரிமாறலாம் அல்லது ஒரு மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம் அவ்வளவுதான் அட்டகாசமான புட்டிங் தயார் இதை குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்னாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்.

Exit mobile version