எளிமையான ஒரு காலை உணவு… மாவு தீர்ந்து விட்டால் உடனடியாக செய்ய அருமையான சேமியா உப்புமா!

உப்புமா என்றாலே பலருக்கும் பிடிக்காத உணவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிலர் உப்புமாவை விரும்பி உண்ணுவார்கள். ஆனால் உப்புமா என்றாலே பல மைல் தூரத்திற்கு ஓடும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பெரும்பாலும் சமையல் செய்பவர்களுக்கு காலை நேர பரபரப்பில் சீக்கிரம் டிபன் செய்ய வேண்டும் என்று தோன்றினால் பலருக்கும் உடனடி தேர்வு உப்புமா தான். ஒரு முறை இந்த சேமியா உப்புமாவை செய்து பாருங்கள். உப்புமா பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடக்கூடியது சேமியா உப்புமா. இதை செய்வதும் மிக சுலபம் சேமியா வேகக்கூடிய நேரமும் குறைவு எனவே இதை எளிமையாக செய்துவிடலாம்.

கோதுமை மாவு இருக்கா? அப்போ கோதுமை தோசை இப்படி செய்து பாருங்கள்!

சேமியா உப்புமா செய்வதற்கு முதலில் கடாயில் ஆறு ஸ்பூன் அளவு எண்ணெய் காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தாளித்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் இதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி மற்றும் இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கேரட், 4 பீன்ஸ் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும், பச்சை பட்டாணியை கொதிக்கின்ற நீரில் போட்டு சிறிது நேரம் வேக விட்டு அதையும் இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். இவற்றை நன்கு வதக்க வேண்டும்.

அனைத்தும் வதங்கியதும் இப்பொழுது 200 கிராம் சேமியாவிற்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்த பிறகு 200 கிராம் அளவு சேமியாவை இதில் சேர்க்கவும். இதனை குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்க விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடலாம்.

ரவையை வைத்து சுவையான ரவை கிச்சடி…! காலை உணவுக்கு சூப்பரான ரெசிபி!

சேமியா உப்புமா நன்கு வெந்து உதிரி உதிரியாக இருக்கும். இதனை சூடான சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

அவ்வளவுதான் சுவையான எளிமையான சேமியா உப்புமா தயார்!

Exit mobile version