அரிசி பாயசம் பாயச வகைகளில் மிக எளிமையான ஒன்றாகும். லட்சுமி தேவியை வணங்கி வீட்டில் செல்வ நிலை பெருக வேண்டும் என்று பெண்கள் வரலட்சுமி விரதத்தன்று விரதம் இருந்து லட்சுமி தேவிக்கு பிரசாதங்கள் படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். 3,5,7 இப்படி எண்ணிக்கையில் பிரசாதம் செய்வது உண்டு. பிரசாதம் செய்யும்பொழுது எப்பொழுதும் பாயாசத்திற்கு கண்டிப்பாக முக்கிய இடம் உண்டு. இந்த முறை வித்தியாசமாக அரிசியை கொண்டு இப்படி அரிசி பாயாசம் செய்து பாருங்கள். இது பாரம்பரியமான ஒரு ரெசிபி ஆகும். இந்த அரிசி பாயசமும் செய்வதற்கு மிக எளிமையாக இருந்தாலும் சுவை நிறைந்ததாக இருக்கும்.
அரிசி பாயாசம் செய்ய பச்சரிசியை அரை கப் எடுத்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்தபின் இதனை மிக்ஸியில் ஒன்று இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். (பச்சரிசியை வறுக்காமல் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து வடிகட்டி பின்பு வெயிலில் காய வைத்தும் உடைத்துக் கொள்ளலாம்.) இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும் பொழுது உடைத்து வைத்திருக்கும் பச்சரிசியை இதில் சேர்க்க வேண்டும். கட்டிகள் ஏதும் இல்லாமல் நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி நன்கு வெந்த பிறகு நான்கு அச்சு வெல்லத்தை இதனுடன் தட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மூடி தேங்காயை துருவி அந்த தேங்காய் பூவினை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு டம்ளர் காய்ச்சிய பாலினை சேர்த்து கொதிக்க விட வேண்டும். அனைத்தும் சேர்ந்து கெட்டியாக வரும் பொழுது இரண்டு ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை என விரும்பிய நட்ஸ்களை வறுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு ஏலக்காயை பொடி செய்து இதனுடன் தூவிக் கொள்ளலாம்.
இந்த ஆடி வெள்ளி அன்று பூஜை நெய்வேத்தியத்திற்கு பாசிப்பருப்பு பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!
வெள்ளத்தை சேர்க்கும் பொழுது நேரடியாக சேர்க்காமல் தனியாக தண்ணீரில் கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளத்தில் ஏதேனும் மண் இருந்தால் வடிகட்டியில் நின்று விடும் பாயசத்தில் சேராது.
அவ்வளவுதான் சுவையான அரிசி பாயாசம் தயாராகிவிடும்…!