வருகின்ற வரலட்சுமி விரதத்திற்கும், விநாயகர் சதுர்த்திக்கும் கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை இப்படி செய்து அசத்துங்கள்…!

பூரண கொழுக்கட்டை வீட்டில் முக்கியமான நாட்களில் நடைபெறும் பூஜை அன்று செய்யக்கூடிய ஒரு சிறப்பு வாய்ந்த இனிப்பு வகையாகவும். வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி போன்ற சில முக்கிய நிகழ்வின் பூஜைகளில் கட்டாயம் பூரண கொழுக்கட்டை இடம் பிடித்து விடும். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வர இருக்கிறது. இந்த வரலட்சுமி விரதத்தன்று பெண்கள் விரதம் இருந்து குடும்பத்தின் செல்வ வளத்திற்காக லட்சுமி தேவியை வழிபடுவர். லட்சுமி தேவிக்கு பூஜை செய்து நெய்வேத்தியம் செய்து வழிபடுவது வழக்கம். இப்படி லட்சுமி தேவிக்கு பூஜைக்காக நெய்வேத்தியம் செய்யும்போது பலரும் பலவிதமான பிரசாதங்களை படைத்து வைத்து வழிபடுவார்கள் அப்படிப்பட்ட பிரசாதங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றுதான் பூரண கொழுக்கட்டை இந்தப் பூரண கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கும் படைக்க கூடிய ஒரு சிறப்பான உணவாகும். இந்த பூரண கொழுக்கட்டையை பல வகையான பூரணம் வைத்து செய்யலாம். இப்பொழுது கடலைப்பருப்பு பூரணம் வைத்து இந்த பூரண கொழுக்கட்டையை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இந்த ஆடி வெள்ளி அன்று பூஜை நெய்வேத்தியத்திற்கு பாசிப்பருப்பு பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!

இந்த கொழுக்கட்டைகள் செய்வதற்கு கடைகளிலேயே தயாராக கொழுக்கட்டை மாவு விற்கப்படுகிறது என்றாலும் வீட்டிலேயே மாவு அரைத்தும் இந்த கொழுக்கட்டையை தயாரிக்கலாம். கொழுக்கட்டைக்கு முதலில் மாவு தயாரிக்க ஒரு கப் பச்சரிசியை தண்ணீரில் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறிய பச்சரிசியை ஒரு வெள்ளை துணியில் விரித்து காய வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் ஊற வைத்து காயவைத்த பச்சரிசியை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பச்சரிசி மாவினை சல்லடை கொண்டு சலித்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது பூரணம் தயாரிக்க குக்கரில் அரை கப் கடலைப்பருப்பு சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பு நன்கு வெந்ததும் மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கப் வெல்லத்தை அடுப்பில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் கரைந்ததும் இதனை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு போல காய்ச்ச வேண்டும்.

இப்பொழுது மசித்து வைத்திருக்கும் வெந்த கடலை பருப்பை இந்த வெல்லத்துடன் சேர்த்து கிளறவும். பின் அரை கப் தேங்காய் துருவலையும் இதனுடன் சேர்த்து கிளற வேண்டும். பூரணம் சற்று இறுகி வந்ததும் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சற்று இறுகியதும் பூரணத்தை இறக்கி விடலாம்.

இப்பொழுது பச்சரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பச்சரிசி மாவுடன் சூடான தண்ணீரில் தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பச்சரிசி மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் தட்டிக் கொள்ளவும். இதன் நடுவே தயாரித்து வைத்த கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து பச்சரிசி மாவினை இரண்டாக மடித்து ஓரங்களில் அழுத்தி விடவும். இது பிறை வடிவில் இருக்கும். இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் இந்த பூரணம் வைத்த மாவுகளை ஒரு இட்டலி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆடி அமாவாசை அன்று வடை, பாயசம் இப்படி செய்து பாருங்கள்…!

அவ்வளவுதான் அருமையான கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை தயார்!!!

Exit mobile version