இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவையான பூண்டு மிளகு சாதம்…!

பூண்டு மிளகு சாதம் சுவை நிறைந்த ஒரு கலவை சாதம் ஆகும். லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் இது குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம். பூண்டு உடலுக்கு அதிக நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவு பொருள். அதனோடு மிளகின் காரமும் சேர்ந்து இந்த பூண்டு மிளகு சாதம், அட்டகாசமான சுவையுடன் இருக்கும். இதற்கு உருளைக்கிழங்கு வருவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், பக்கோடா என அனைத்து வகை சைடு டிஷ்களும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இந்த பூண்டு மிளகு சாதத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இனி உருளைக்கிழங்கு மசாலா இப்படி ஈஸியா செய்து பாருங்கள்…!

பூண்டு மிளகு சாதம் செய்வதற்கு முதலில் 200 கிராம் அளவு பாஸ்மதி அரிசியை வேகவைத்து வடித்துக்கொள்ள வேண்டும். சாதம் அதிகம் குழைந்து விடாமல் பக்குவமாய் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் சோம்பு, 4 வரமிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். வரமிளகாயை முழுதாக சேர்க்காமல் இரண்டு மூன்றாக கிள்ளி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு 20 பல் பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை எண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ளவும். பூண்டு வதங்கியதும் இதனுடன் 10 முந்திரி, பத்து உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து எண்ணெயில் நன்கு வறுத்து கொள்ளவும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் ஒரு தக்காளியை சேர்த்து அதையும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

சுலபமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! சட்டுனு செய்யலாம் சுவையான சீரக சாதம்…!

இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் தனியாத்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி இதனை சிறிது நேரம் கொதிக்க விடவும்.

கொதித்து சுருண்டு வந்ததும் நாம் வேகவைத்து வடித்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சாதத்துடன் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒன்றரை டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் ஒன்றிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சாதம் உடையாமல் மசாலாக்கள் அனைத்தும் சேர்ந்து வரும்படி கிளறி இறக்கினால் சுவையான பூண்டு மிளகு சாதம் தயார்.

Exit mobile version