இனி கேசரி செய்தால் இப்படி தான் செய்வீர்கள்… வாயில் வைத்ததும் கரையும் பைனாப்பிள் கேசரி…!

பைனாப்பிள் கேசரி வழக்கமாக நாம் செய்யும் கேசரியை விட சுவை நிறைந்ததாக இருக்கும். இதில் ரவையை நன்றாக வறுத்து செய்தால் ரவை முத்து முத்தாக வாயில் வைத்ததும் கரையும் விதமாக இந்த கேசரி இருக்கும். வீட்டில் பண்டிகை அல்லது முக்கியமான நிகழ்வுகளுக்கு வழக்கமாக செய்யும் கேசரி போல இல்லாமல் ஒரு முறை இந்த பைனாப்பிள் கேசரியை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மீண்டும் மீண்டும் இதே கேசரியை செய்யச் சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும். வாருங்கள் சுவையும் மணமும் நிறைந்த பைனாப்பிள் கேசரி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கல்யாண வீட்டு ரவை கேசரி! சுவை மாறாமல் அதே சுவையில் செய்வது எப்படி?

பைனாப்பிள் கேசரி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு நறுக்கிய பைனாப்பிள் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு கப் அளவிற்கு ரவை மற்றும் ஒன்னே கால் கப் அளவிற்கு சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பவுலில் ஏழு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் மற்றும் 7 மேசைக் கரண்டி அளவிற்கு நெய் இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கவும். இப்பொழுது ஒரு கடாயில் நாம் கலந்து வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் நெயில் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு உலர் திராட்சை சேர்த்து உலர் திராட்சை உப்பி வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் சிறிதளவு கலந்து வைத்திருக்கும் எண்ணெய் சேர்த்து நாம் நறுக்கி வைத்திருக்கும் பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் வைத்து பைனாப்பிள் மென்மையாகும் வரை சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். பைனாப்பிள் நன்கு வதங்கியதும் இப்பொழுது நாம் கேசரிக்கு தேவையான தண்ணீர் ஊற்றலாம். ஒரு கப் ரவைக்கு இரண்டரை கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் மற்றொரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் ரவையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை நன்கு வறுப்பட்டால் தான் இந்த கேசரி நன்றாக இருக்கும்.

தண்ணீர் கொதித்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் ரவையை இப்பொழுது தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் ஏதும் இல்லாமல் கிளறி விட வேண்டும். கெட்டிப்படாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். ரவை தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி நன்கு வெந்து வந்திருக்கும். இப்பொழுது ஒன்னே கால் கப் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு சிறிதளவு மஞ்சள் நிற புட் கலர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக குங்கும பூவும் சேர்க்கலாம். அனைத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும். இறுதியாக மீதம் இருக்கும் நெய் மற்றும் வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சைகளை சேர்த்து சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அவ்வளவுதான் அட்டகாசமான சுவையுடன் பைனாப்பிள் கேசரி தயாராகி விட்டது…!

Exit mobile version