விநாயகர் சதுர்த்திக்கு இதுபோல பிடி கொழுக்கட்டை செய்து பாருங்கள்!

விநாயகர் சதுர்த்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொண்டாடப்படக்கூடிய ஒரு முக்கிய பண்டிகையாகும். ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விநாயகர் பிறந்த தினமாக கருதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பாயாசம் ஆகியன செய்து விநாயகரை வணங்கி வழிபடுவர். இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிடி கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

அவலை வைத்து அருமையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலான அவல் பாயசம்!

இந்த பிடி கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபமானது இதற்கு தனியாக பூரணம் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மிக எளிமையாக இந்த கொழுக்கட்டையை செய்துவிடலாம் அதே சமயம் சுவையும் அருமையாக இருக்கும்.

பிடி கொழுக்கட்டை செய்வதற்கு ஒரு கப் அளவு பச்சரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மேஜை கரண்டி அளவு பாசிப்பருப்பினை வேகவைத்து கொள்ள வேண்டும். இது மசிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூன்று அச்சு வெல்லத்தை நன்கு தட்டிக் கொள்ளவும். தட்டிய வெல்லத்துடன் அரை டம்ளர் அளவு தண்ணீரை சேர்த்து இந்த வெல்லத்தை அடுப்பில் வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

வருகின்ற வரலட்சுமி விரதத்திற்கும், விநாயகர் சதுர்த்திக்கும் கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை இப்படி செய்து அசத்துங்கள்…!

வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் இதனை பாகு போல காய்ச்சி வடிகட்டவும். வடிகட்டிய வெல்லப் பாகை ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவில் ஊற்றி அதனுடன் நான்கு மேஜை கரண்டி அளவு துருவிய தேங்காய் சேர்க்க வேண்டும். இப்பொழுது வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்க வேண்டும்.

சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை நன்கு கெட்டியாக பிசைந்ததும் இதனை சிறிய பகுதியாக எடுத்து நீளவாக்கில் உருட்ட வேண்டும். மாவை நீளவாக்கில் உருட்டி விரல் பதியுமாறு ஒரு பிடி பிடித்து வைக்க வேண்டும்.

வரலட்சுமி விரதத்திற்கு அரிசி பாயசம் செய்து பாருங்கள்! மிக எளிமையான அரிசி பாயசம்…

இப்பொழுது ஒரு இட்டலி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து தண்ணீர் கொதித்ததும். பிடித்து வைத்த கொழுக்கட்டை மாவினை இட்லி தட்டில் அடுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து விடலாம்.

அவ்வளவுதான் மிக மிக எளிமையான பிடி கொழுக்கட்டை தயாராகி விடும்.

Exit mobile version