ரசம் சாதத்திற்கு சுவையான பருப்பு துவையல்… இப்படி செய்து பாருங்கள்..

ரசம் சாதம், கஞ்சி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பருப்புத் துவையல் தான். ரசம் மற்றும் கஞ்சி சாதத்திற்கு பருப்பு துவையல் சைடிஷ் அருமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சூடான குழைந்த சாதத்தில் இந்த பருப்பு துவையலை போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். அனைத்து வகையான கலவை சாதத்திற்கும் கூட இதனை சைடிஷ் ஆக சாப்பிடலாம். சுவையான இந்த பருப்பு துவையல் செய்வது மிக மிக சுலபம் வாருங்கள் பரப்புத் துவையல் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கட்டுச் சாதத்துடன் சாப்பிட சுவையான தேங்காய் துவையல்!

அடுப்பில் வாணலி வைத்து அதில் அரை ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்‌. நெய் உருகியதும் நான்கு மேசை கரண்டி அளவு துவரம் பருப்பை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். துவரம் பருப்பு சிவந்து வாசனை வரும் வரை குறைவான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்து எடுத்த துவரம் பருப்பை ஆறவிட வேண்டும்.

துவரம் பருப்பு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் இரண்டு வர மிளகாய், தேவையான அளவு உப்பு, ஒரு மேஜை கரண்டி துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் அதிகம் ஊற்றி விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.

ஆரோக்கியம் நிறைந்த பருப்புப் பொடி…! இனி இப்படி செய்து பாருங்கள்…

துவையலை மிக்ஸியை விட்டு எடுக்கும் முன்பு இரண்டு பல் பூண்டை தோலோடு போட்டு ஒரு சுற்று சுற்றியதும் நிறுத்தி துவையலை எடுக்கலாம். அவ்வளவுதான் சுவையான பருப்பு துவையல் தயாராகி விட்டது.

Exit mobile version