சேமியாவை இப்படி சமைத்து பாருங்கள்… காலை டிபனுக்கு சூப்பரான லெமன் சேமியா…!

சேமியா என்றதும் பலருக்கும் அதை வைத்து பாயாசம் செய்யலாம் என்றுதான் தோன்றும். ஆனால் சேமியாவை கொண்டு சுவையான பல ரெசிபிகளை நாம் தயாரிக்க முடியும். சேமியா உப்புமா, சேமியா கிச்சடி என்று பலவகையான டிபன் வகைகளை நாம் தயார் செய்யலாம். சுவையாக அதே சமயம் எளிமையாக செய்யக்கூடிய ரெசிபியாக சேமியாவை வைத்து செய்யும் ரெசிபிகள் அமைகின்றன. அதனால் தான் வீட்டில் பெரும்பாலும் சட்டென்று ஏதாவது சமைக்க வேண்டும் என்றால் பலரும் சேமியாவை நாடுவதுண்டு. அப்படி சேமியாவை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிய டிபன் வகை தான் லெமன் சேமியா. இந்த லெமன் சேமியா புளிப்பு சுவையுடன் அனைவருக்கும் பிடித்த வகையில் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இந்த லெமன் சேமியாவை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

எளிமையான ஒரு காலை உணவு… மாவு தீர்ந்து விட்டால் உடனடியாக செய்ய அருமையான சேமியா உப்புமா!

லெமன் சேமியா செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சேமியா வேக தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் சேமியாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சேமியாவை நீண்ட நேரம் வேக வைத்து விடக்கூடாது ஓரிரு நிமிடங்கள் சேமியா கொதித்த தண்ணீரில் வெந்ததும் அடுப்பை அணைத்து சேமியாவை இறக்கி வடிகட்டி விடலாம்.

இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் கடுகு, சிறிதளவு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். விருப்பமான அளவு வேர்கடலை சேர்த்து அதையும் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி! இனி தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க!

இப்பொழுது ஒரு ஸ்பூன் அளவு பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். கால் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்து வடித்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து அதனோடு அரை மூடி எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து கலந்து விடவும். அனைத்தும் ஒன்று சேர கலந்து விட வேண்டும். இதை நீண்ட நேரம் அடுப்பில் வைத்து கிளற வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் நன்கு கலந்த பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலா.ம் இந்த லெமன் சேமியாவோடு தேங்காய் சட்னி மிக சுவையான காம்பினேஷனாக இருக்கும். அவ்வளவுதான் சுவையான லெமன் சேமியா தயார்!

Exit mobile version