சைவ, அசைவ அனைத்து குழம்பு வகைகளுக்கும் இந்த ஒரு குழம்பு தூள் போதும்!

மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் என குழம்பு வகைகளுக்கு பயன்படுத்தும் தூள் வகைகளை பெரும்பாலும் கடைகளில் வாங்கி பலரும் பயன்படுத்துவது உண்டு. இந்த தூள் வகைகளை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே அரைத்து வைப்பது என்பது மிகப்பெரிய வேலை ஆகும். ஆனால் இப்படி தனித்தனியாக தூள் வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே அனைத்து குழம்புகளுக்கும் பயன்படுத்தும் வகையில் ஒரே குழம்பு தூளாக தயார் செய்து பயன்படுத்தலாம். மேலும் இந்த குழம்பு தூள் பயன்படுத்த செய்யும்போது குழம்பின் சுவையும் நன்றாக இருக்கும். வாருங்கள் இந்த குழம்பு மிளகாய் தூள் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வித்தியாசமாக முயற்சித்துப் பாருங்கள் காலை, இரவு உணவுக்கு அருமையான நீர் தோசை!

இந்த குழம்பு தூள் தயார் செய்வதற்கு முதலில் இரண்டு கிலோ அளவிற்கு முழு மல்லி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முழு மல்லியுடன் 400 கிராம் அளவிற்கு சோம்பு, 400 கிராம் அளவிற்கு சீரகம், 200 கிராம் மிளகு மற்றும் 200 கிராம் அளவிற்கு விரலி மஞ்சள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். நாம் சேர்த்த அனைத்து பொருட்களும் வெயிலில் நன்றாக காய்ந்து மொறுமொறுப்பாக வரும் படி காய வைக்கவும். வெயிலில் நன்றாக காய்ந்த பிறகு இதனை மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளலாம்.

இந்த குழம்பு தூளிற்கு தேவையான மிளகாய் தூள் தயார் செய்வதற்கு ஒரு கிலோ அளவிற்கு காய்ந்த மிளகாய் உடன் ஒரு கிலோ காஷ்மீரி மிளகாயும் சேர்த்து வெயிலில் நன்றாக காய வைக்கவும். மிளகாய் நல்ல மொறு மொறுப்பாக காய்ந்ததும் அதையும் மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கிக் கொள்ளவும். இப்பொழுது நாம் தயார் செய்த குழம்பு தூள் பயன்படுத்தினால் மூன்று ஸ்பூன் குழம்பு தூளிற்கு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்தால் போதுமானது. இதனை அனைத்து வகையான குழம்பிற்கும் பயன்படுத்தலாம். அசைவ குழம்பிற்கும் நாம் இதே தூளை பயன்படுத்துவதால் இதில் பருப்பு வகைகள் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. காஷ்மீரி மிளகாய் சேர்த்து செய்வதால் குழம்பு நல்ல நிறத்துடனும் இருக்கும். காற்று புகாதவாறு சிறிய டப்பாக்களில் இதனை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

அனைவருக்கும் பிடித்த மணமணக்கும் காரசாரமான இட்லி பொடி! கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்யுங்கள்!

அவ்வளவுதான் சைவ அசைவ குழம்பு வகைகளுக்கு ஏற்ற குழம்பு தூள் தயாராகி விட்டது!

Exit mobile version