ஒருமுறை வெண்டைக்காயை இப்படி செய்து பாருங்கள்… கேரளா ஸ்டைலில் அட்டகாசமான வெண்டைக்காய் கறி…!

வெண்டைக்காய் உடலுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் இ என பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திலும் நன்மை புரிகிறது. இந்த வெண்டைக்காயை வைத்து எப்படி சுவையான வெண்டைக்காய் கறி செய்வது என்பதை பார்க்கலாம். இது கேரளா ஸ்டைலில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி ஆகும்.

சுலபமா செய்யலாம் சுவையான வெண்டைக்காய் மோர்குழம்பு…!

இதற்கு 250 கிராம் வெண்டைக்காயை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதன் ஈரத்தன்மையை துடைத்து விட வேண்டும். பிறகு இதனை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் வழவழப்பு தன்மை போகும் வரை வதக்கி விட வேண்டும். இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி விடவும். வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் இதனை தனியாக வைத்து விடலாம்.

விரத நாட்களில் வெண்டைக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்கள்…!

இப்பொழுது அதே கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்க்கவும். இதனுடன் 20 சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். வெங்காயம் நிறம் மாறி வந்ததும் ஐந்து பல் பூண்டை சேர்த்து வதக்கி விடவும். வெங்காயம் முழுவதும் வழங்கி பூண்டு பச்சை வாசனை போனதும் இதில் இப்பொழுது இரண்டு தக்காளி பழங்களை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தக்காளி பழத்தை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், கால் டீஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விடவும். மசாலாக்கள் முழுவதும் வதங்கி பச்சை வாசனை போனதும் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து ஊற்ற வேண்டும். இதனை சிறிது நேரம் கொதிக்க விடவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். பிறகு நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இப்பொழுது நன்கு கொதித்து குழம்பு நன்கு வற்றியதும் இதில் சிறிதளவு மல்லித்தழை மற்றும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம் சேர்த்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான வெண்டைக்காய் கறி கேரளா ஸ்டைலில் தயாராகி விட்டது.

Exit mobile version