செட்டிநாட்டு ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்… இந்த தீபாவளிக்கு இதை செய்து அசத்துங்கள்…!

பலகாரங்களுக்கு பெயர் பெற்றது செட்டிநாடு பகுதி. செட்டிநாட்டு பகுதிகளில் விதவிதமான பலவேறு பலகாரங்களை அங்குள்ள மக்கள் செய்து பண்டிகைகள் விழாக்கள் போன்ற நாட்களை சிறப்பித்து வருகிறார்கள். பாரம்பரியம் நிறைந்த பல்வேறு வகையான பலகாரங்கள் இந்த பகுதிகளில் செய்வது வழக்கம். அப்படி செட்டிநாட்டு பகுதியில் சிறப்பு வாய்ந்த ஒரு பலகாரம் தான் கருப்பட்டி பணியாரம். கருப்பட்டியை வைத்து செய்யக்கூடிய இந்த கருப்பட்டி பணியாரம் மிக சுவை நிறைந்ததாக இருக்கும். வாருங்கள் இந்த கருப்பட்டி பணியாரத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கருப்பட்டி பணியாரம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பச்சரிசியை ஊற வைக்க வேண்டும் இந்த அரிசி 2 மணி நேரம் ஊற வேண்டும் நன்கு உரிய பின்னர் இதில் உள்ள தண்ணீரை வடித்து இதனை அரைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் இந்த அரிசியை அரைத்து சலித்து மாவு எடுக்க வேண்டும். மாவு மிகவும் நைசாக இருக்கக் கூடாது. சற்று கொரகொரப்பாக இருந்தால் தான் பணியாரம் நன்றாக இருக்கும்.

இப்பொழுது அரை கப் அளவு கருப்பட்டி மற்றும் இரண்டு அச்சு வெல்லம் ஆகியவற்றை தட்டி கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகாக காய்ச்சிக் கொள்ளவும். பாகு காய்ச்சிய பிறகு இதனை வடிகட்டி ஆற விட வேண்டும். நாம் ஏற்கனவே சலித்த மாவில் இந்தப் பாகை ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி இதனை கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நல்ல அகலமான இருப்பு சட்டியில் நெய் மற்றும் எண்ணெய் பொறிக்க தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கொஞ்சம் ஏந்தலாக உள்ள கரண்டியால் பணியார மாவை எடுத்து ஊற்ற வேண்டும். இருபுறமும் திருப்பி விட்டு வேக விடவும் வெந்ததும் எடுத்து விடலாம்.

வாயில் வைத்ததும் கரையும் சுவையான பாதுஷா… இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள்!

இதில் எண்ணெய் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க நெய்யிலும் ஊற்றி எடுக்கலாம். பிசைந்த மாவை இரண்டு வாரம் வரை வைத்திருந்து கூட உதிர்த்து தண்ணீர் ஊற்றி பயன்படுத்தலாம். அவ்வளவுதான் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார்!

Exit mobile version