மஹாளய அமாவாசைக்கு ஜவ்வரிசி பாயசம் இப்படி செய்து பாருங்கள்… எளிமையான ஜவ்வரிசி பாயாசம்…!

மஹாளய அமாவாசைக்கு முன்னோர்களுக்காக செய்யும் சமையலில் கட்டாயம் ஒரு பாயாசம் இடம் பிடித்து விடும். இந்த மஹாளய அமாவாசைக்கு ஜவ்வரிசியை வைத்து இப்படி எளிமையான ஜவ்வரிசி பாயாசம் செய்து பாருங்கள். ஜவ்வரிசி உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது. தசைகளை வலுப்படுத்திடவும் இந்த ஜவ்வரிசி உதவுகிறது. மேலும் உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும் ஜவ்வரிசி துணை புரிகிறது. இந்த ஜவ்வரிசியை வைத்து எப்படி சுவையான ஜவ்வரிசி பாயாசத்தை எளிமையாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இந்த ஆடி வெள்ளி அன்று பூஜை நெய்வேத்தியத்திற்கு பாசிப்பருப்பு பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!

ஜவ்வரிசி பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு ஜவ்வரிசியை எடுத்து சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசி சிறிது நேரத்தில் ஊறிவிடும். ஜவ்வரிசி ஊறிய பிறகு ஒரு பாத்திரத்தில் மூன்று கப் அளவு பால் சேர்த்து பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பாலை காய்ச்சிய பிறகு நாம் ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியில் தண்ணீரை வடித்து பாலில் சேர்த்து வேக விட வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு அருமையான இந்த பால் கொழுக்கட்டை செய்து அனைவரையும் அசத்துங்க!

ஜவ்வரிசி நன்றாக வேக வேண்டும். ஜவ்வரிசி வெந்த பிறகு அரை கப் அளவு சீனியை சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து நெய் உருகியதும் அதில் ஆறிலிருந்து எட்டு முந்திரி பருப்பு, சிறிதளவு உலர் திராட்சை ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தயாராக உள்ள ஜவ்வரிசியில் ஏலக்காய் தூள் சேர்த்து வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் ஜவ்வரிசி பாயாசம் தயார்.. இதனை ஆற வைத்து பரிமாறலாம்.

Exit mobile version