இனி சட்னி செய்ய அதிக நேரம் வேண்டாம்.. ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பரான சட்னி ரெசிபி..!

இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு தினமும் என்ன சட்னி செய்வது என்பது மிகப்பெரிய குழப்பமாக இருக்கும். அதுவும் காலை நேர பரபரப்பில் என்ன சட்னி செய்வது என்பது புரியாது. அவசரமான நேரத்தில் சட்டென்று வைப்பதற்கு ஒரு எளிமையான சட்னி ரெசிபி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த சட்னி ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இதை ஒரே நிமிடத்தில் செய்து அசத்தி விடலாம். சுவையும் நன்றாக இருக்கும். வாருங்கள் இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இந்த சட்னி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு பூண்டு பற்களை சேர்க்கவும். பூண்டை தோலுடனும் சேர்க்கலாம் அல்லது தோல் நீக்கியும் சேர்க்கலாம். பிறகு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை இப்படி தக்காளி சட்னி செய்து பாருங்கள்… கையேந்தி பவன் ஸ்டைலில் அட்டகாசமான சட்னி ரெசிபி…!

காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய்களை சேர்க்கலாம். நல்ல நிறமுடன் சட்னி இருக்க வேண்டும் என்றால் காஷ்மீரி மிளகாய்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் இதனை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்து சட்னியை ஒரு பவுலில் சேர்க்கவும்.

சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சட்னி சுவையாக இப்படி செய்து பாருங்கள்!

இந்த சட்னியுடன் ஒரு மூன்று மேசை கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். இதில் எண்ணெய் சூடு செய்யாமல் சேர்ப்பதால் நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விருப்பப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு சிறிய தாளிப்பு செய்து கொள்ளலாம்.

வழக்கமான சட்னி போரடிக்கிறதா? அப்போ இப்படி செய்து பாருங்கள் வித்தியாசமான தக்காளி குருமா!

அவ்வளவுதான் அட்டகாசமான சட்னி தயார். இது இட்லி தோசை சப்பாத்தி என அனைத்திற்கும் நன்றாக இருக்கும். சாதத்திற்கு கூட சாப்பிடலாம்.

Exit mobile version