மட்டனின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான நன்மைகளை தரக்கூடியது. அதனை முறையாக சமைத்து சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மை தரும். மட்டனின் ஒரு முக்கிய பகுதியான ஈரல் அதிக அளவு இரும்புச் சத்து நிறைந்தது ரத்த சோகை உள்ளவர்கள் அனிமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஈரலை அடிக்கடி உணவில் சேர்த்தால் ரத்த சோகையை விரட்டி விடலாம். மேலும் நெஞ்சு சளியினால் அவதிப்படுபவர்கள் இந்த ஈரலை சாப்பிட நெஞ்சு சளி கரைந்து சளி பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். இந்த மட்டன் ஈரலை குழந்தைகளுக்கும் தாராளமாக கொடுக்கலாம். ஆட்டின் ஈரலை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்ய முடியும் இப்பொழுது இந்த ஆட்டின் ஈரல் வைத்து எப்படி சுவையான ஈரல் வறுவல் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஈரல் வறுவல் செய்வதற்கு 1/4 கிலோ அளவு ஈரலை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஈரலை நறுக்கிய பின்பு ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இது நன்கு பொரிந்ததும் 150 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயத்தை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். முழுமையாக வதங்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஓரளவு வதங்கி இருக்கும் பொழுதே இதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் ஈரலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கையளவு தண்ணீர் தெளித்து இதனை ஒரு முறை கிளறி மூடி வைக்கவும் அடுப்பு குறைந்த தீயில் இருக்க வேண்டும்.
கிராமத்து ஸ்டைலில் சூப்பரான உப்பு கறி… ஒரு முறை செய்தால் திரும்பத் திரும்ப செய்வீர்கள்!!
தண்ணீர் வற்றி ஓரளவு வெந்ததும் இதனுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் மிளகுத்தூள் தூவி நன்கு கிளறி விடவும். மசாலாக்கள் முழுமையாக ஈரலில் இறங்கி ஈரல் சுருங்கி வற்றி இருக்கும். இப்பொழுது ஈரலை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான ஈரல் வறுவல் தயார்…!
இது தயிர் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்…!