தோசை மாவு தீர்ந்துடுச்சா கவலை வேண்டாம்… சூடா மொறு மொறுன்னு ரவா தோசை இப்படி செய்யுங்கள்!

ரவா தோசை தோசை பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான தோசை. ரவா தோசை வழக்கமான தோசையை விட மொறுமொறுவென சுவையாக இருக்கும். வீட்டில் மாவு தீர்ந்த சமயத்தில் தோசை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இந்த ரவா தோசையை முயற்சித்துப் பார்க்கலாம். உணவகங்களில் கிடைப்பது போலவே மொறுமொறுவென சுவையான தோசையை வீட்டிலேயே தயார் செய்ய முடியும்.

சூடான சுவையான அடை!! காலை நேர டிபனுக்கு அடை இப்படி செய்யுங்கள்!

ஒரு கப் ரவையை வானலியில் வறுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். வறுத்த ரவையுடன் அரை கப் அரிசி மாவு, மற்றும் கால் கப் மைதா மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருக்கக் கூடாது அதே சமயம் அதிக தண்ணீராகவும் இருக்கக் கூடாது. இரண்டு பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி இதனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கலந்த பின்பு 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். ரவை நன்றாக ஊற வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு தோசை கல்லை காயவைத்து எண்ணெய் தடவி ஊற வைத்து இருக்கும் மாவை தோசையாக ஊற்ற வேண்டும்.

வழக்கமான தோசை போல நடுவில் மாவை ஊற்றி பிறகு பரப்பாமல் மாவினை சுற்றிலும் ஊற்றி பின் நடுவில் காலியான இடங்களுக்கு சிறிது சிறிதாக பரப்ப வேண்டும். தோசை மெலிதாக இருக்க வேண்டும் கணமாக ஊற்றக்கூடாது. சுற்றிலும் எண்ணெய் ஊற்றி நடுவிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி வைத்து வேக விடவும் ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு குறைவான தீயில் வைத்து வேகவிடவும். மொறு மொறுப்பாக வெந்ததும் மடக்கி எடுக்கவும். இதனை சூடாக கொத்தமல்லி சட்னி வைத்து பரிமாறலாம்.

அனைத்து சளி தொந்தரவுகளையும் துரத்தி அடிக்கும் தூதுவளையை வைத்து சூப்பரான காலை நேர டிபன்! தூதுவளை அடை!!!

அவ்வளவுதான் சுவையான மொறுமொறுவென்ற ரவா தோசை தயாராகிவிடும்!

Exit mobile version