ரெஸ்டாரன்ட் சுவையிலேயே வீட்டில் செய்யலாம் சில்லி சிக்கன்…!

ரெஸ்டாரண்ட்களில் பலருக்கும் விருப்ப உணவாக இருப்பது சில்லி சிக்கன். சிக்கனை பொரித்து அதனுடன் சாஸ்கள் சேர்த்து செய்யப்படும் இந்த சில்லி சிக்கன் ரெஸ்டாரன்களில் மட்டும்தான் சுவைக்க முடியும் என்று இல்லை. இந்த சில்லி சிக்கனை அதே சுவையில் நாமே வீட்டில் செய்ய முடியும். இதை செய்வது கடினம் என்று நினைக்க வேண்டாம். வாருங்கள் சுலபமாக எப்படி வீட்டில் ரெஸ்டாரண்ட் சுவையில் சில்லி சிக்கன் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சில்லி சிக்கன் செய்வதற்கு 300 கிராம் அளவு சிக்கனை ஒரு பவுலில் எடுத்து அதனை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கடிக்க ஏதுவான வகையில் ஒரே மாதிரியான அளவில் இதனை துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த சிக்கனில் நாம் மசாலாக்களை சேர்க்கலாம். தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் வினிகர், 2 டீஸ்பூன் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுலபமாக செய்யலாம் கேரளா ஸ்டைலில் அருமையான சிக்கன் தோரன்!

பிறகு ஒரு முட்டையை உடைத்து அதனை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். அடித்த முட்டையை சிக்கனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் மூன்று மேசை கரண்டி மைதா மாவு, மூன்றுமேசை கரண்டி சோள மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். சிக்கன் முழுவதும் படும்படி நன்றாக கலந்ததும் இதனை மூடி போட்டு 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து ஒரு வாணலியில் பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் வைத்து ஊற வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் முழுவதும் வெந்து பொன்னிறமாகும் வரை இதனை பொறுமையாக பொறித்து எடுக்கவும். அதிக அளவு சிக்கன்களை எண்ணெயில் சேர்த்து விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொறிக்கவும். பொரித்து எடுத்த சிக்கனை டிஷ்யூ பேப்பரில் வைத்து தனியாக வைத்து விடலாம்.

இப்பொழுது ஒரு பேனில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய ஒரு மேசை கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கிய ஒரு மேசை கரண்டி பூண்டு, நான்கு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு விருப்பமான அளவில் வெங்காய இதழ்கள், குடைமிளகாய்கள் ஆகியவற்றை சதுர வடிவில் நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும்.

சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி இதனை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். காய்கறி முழுவதுமாக வதங்கக் கூடாது. வாயில் கடிபடும் வகையில் வதங்கினால் போதும். இப்பொழுது இதற்கு தேவையான சாஸ்களை சேர்க்கலாம். மூன்று டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ், ஒரு டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ், இரண்டு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.

சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.. அருமையான சுவையுடன் கிரீன் சிக்கன் கறி!

அனைத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு பவுலில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சோள மாவு சேர்த்து அதனுடன் அரைக்கப் அளவு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அதை சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது பொரித்து எடுத்து சிக்கனை சேர்த்து சிக்கன் முழுவதும் சாஸ் படும் படி கிளறி எடுக்கவும். இறுதியாக வெங்காயத்தாள் பொடியாக நறுக்கி தூவி இறக்கினால் அட்டகாசமான சில்லி சிக்கன் தயார்.

Exit mobile version