செட்டிநாடு பலகார ஸ்பெஷல் ரங்கூன் புட்டு!

செட்டிநாடு சமையல் என்றாலே தனி ஸ்பெஷல் தான். அதிலும் பலகாரங்கள் சிறப்பு சொல்லவே வேண்டாம். அந்த வகையில் செட்டிநாடு அழகான ஸ்பெஷல் ரங்கூன் புட்டு நம் வீட்டில் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

இந்த புட்டு செய்வதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பொன்னிறமாக வறுபட்டதும் தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மீதம் இருக்கும் அதை நெய்யில் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். தேங்காய் புதிதாக இருந்தால் பலகாரத்தின் சுவை சிறப்பாக இருக்கும்.

ஒரு கப் தேங்காய் எடுத்ததன் காரணமாக நாம் ஒரு கப் ரவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல இந்த புட்டிங் இனிப்பிற்காக ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கப் ரவையை கடாயில் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். ரவை வறுக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்தால் வாசமாக இருக்கும்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றரை கப் வெள்ளத்திற்கு 4 கப் தண்ணீர் சேர்த்து வெள்ளத்தை கொதிக்க விட வேண்டும். வெள்ளம் நன்கு கரைந்து கொதித்து வரும் நேரத்தில் நாம் வறுத்து வைத்திருக்கும் ஒரு கப் ரவையை அதனுடன் சேர்க்க வேண்டும்.

இட்லி மாவு இல்லாத நேரத்தில் சுவையான இனிப்பு இட்லி!

ரவை நன்கு வெந்து வரும் நேரத்தில் வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் நம் நெய்யில் வறுத்த துருவிய தேங்காயை இதில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ரவையுடன் தேங்காய் நன்கு கலந்து வரும் நேரத்தில் இறுதியாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளற வேண்டும்.

இப்பொழுது சுவையான ரங்கூன் புட்டு தயார். நாம் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் திராட்சை பழங்களை பரிமாறுவதற்கு முன் இதில் கலந்து பரிமாறினால் சுவை மிகச் சிறப்பாக இருக்கும்.

Exit mobile version