குழந்தைகளுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு வைத்து பச்சை மிளகாய் கார வறுவல்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் காய்கறிகளின் ஒன்று உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிகவும் அருமையாக தான் இருக்கும். மசாலா தோசையில் துவங்கி சப்பாத்தி பரோட்டா என அனைத்திற்கும் உருளைக்கிழங்கு சிறந்த சைடிஷ்ஷாக இருக்கும். இந்த முறை உருளைக்கிழங்கு வைத்து அருமையான கார வருவல் செய்யலாம் வாங்க. அதுவும் பச்சை மிளகாய் பயன்படுத்தி உருளைக்கிழங்கு கார வறுவல் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் 300 கிராம் அளவுள்ள உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு உருளைக்கிழங்கை ஆறாக நறுக்கி ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து மூடி போட்டு மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளலாம்.

இந்த நேரத்தில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதங்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஏழு பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளலாம்.

காரம் சற்று குறைவாக தேவைப்படும் என நினைப்பவர்கள் மூன்று அல்லது ஐந்து பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். அதிகமாக வேண்டும் என நினைப்பவர்கள் ஏழு முதல் 10 மிளகாய் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் கழித்து நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ப்ரைஸ் பதிலாக ஹெல்தியான வெண்டைக்காய் பிரெஞ்ச் ப்ரைஸ்! வீட்டிலேயே செய்ய ரெசிபி இதோ…

மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்.ஒன்று முதல் இரண்டு நிமிடம் நன்கு எண்ணெயோடு வதக்கிய பிறகு நாம் வேகவைத்த உருளைக்கிழங்குகளை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை நன்கு மசாலா ஓடு கலந்து கொடுத்து இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பச்சை மிளகாய் கார மசாலா தயார்.

Exit mobile version