கிழங்கே இல்லாமல் அருமையான உருளைக்கிழங்கு மசாலா… சப்பாத்தி மற்றும் பூரிக்கு அசத்தலான சைட்ஷ்….

நம் வீட்டில் பூரி மற்றும் சப்பாத்தி செய்தால் அதற்கு சிறந்த சைட் டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசாலா செய்வது வழக்கம். காரம் குறைவாக எளிமையான பக்குவத்தில் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த உருளைக்கிழங்கு மசாலாவை கிழங்கு இல்லாமல் எளிமையான முறையில் செய்வதற்கான அசத்தல் ரெசிபி இதோ……

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவை சேர்த்து நிறம் மாறும் வரை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வாசனை வரும்வரை வறுத்த இந்த கடலை மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கடலை மாவை இப்படி வறுத்து பயன்படுத்துவதால் பச்சை வாசனையை தவிர்க்க முடியும். அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி உளுந்து சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

கடுகு நன்கு பொரிந்ததும் கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு சிறிய துண்டு துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாய் பாதி வெந்ததும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் வதக்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் ஒரு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்ததாக நாம் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை இதில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் கூடுதலாக ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம், பூண்டு சேர்க்காமல் 10 நிமிடத்தில் அருமையான தக்காளி சாதம்! லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதோ…

கடலை மாவு கலவையை சேர்த்தவுடன் அடுப்பை குறைத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் மாவு சீக்கிரமாக கெட்டியாக மாறி கட்டிகள் பிடித்து விடும்.

மேலும் கைவிடாமல் கிளறி கொடுக்கவும் வேண்டும். தண்ணீர் நன்கு வற்றி கெட்டியான பதத்திற்கு வந்ததும் கைப்பிடி அளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மசாலா தயார். உருளைக்கிழங்கு மசாலா சுவையிலேயே இருக்கும் இந்த மசாலா பூரி மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.

Exit mobile version