ஆந்திரா மெஸ் ஸ்பெஷல் பருப்பு பொடி நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபி இதோ!

ஆந்திரா மெஸ் களில் மட்டுமே கிடைக்கும் பருப்பு பொடிக்கு தனி மவுசுதான். முதலில் சாதம் வைத்து அதற்கு தாராளமாக பருப்பு பொடி சேர்த்து நெய் கலந்து சாப்பிடும் பொழுது ஆஹா அவ்வளவு சுவையாக இருக்கும். வாங்க இந்த சுவை பிடித்தவர்களுக்கு வீட்டில் எளிமையான பொருட்கள் வைத்து சுலபமாக அதே சுவையில் பருப்பு பொடி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் ஒரு அகலமான தவாவில் கால் கப் துவரம்பருப்பு சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பு பொன்னிறமாக மாறியதும் ஒரு தட்டிற்கு மாற்றி விடலாம். அடுத்ததாக அதே கடாயில் கால் கப் பாசிப்பருப்பு சேர்த்து அதைப்போல வாசனை வரும் வரை நன்கு வறுத்து தனியாக மாற்றிக் கொள்ளலாம்.

மீண்டும் அதே கடாயில் கால் கப் பொரிகடலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பொரிகடலை நன்கு நிறம் மாறியதும் தனியாக அதை தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி மிளகு மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வறுத்து தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

அடுத்தது கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் காஷ்மீரி மிளகாய் நிலத்திற்காக 5, காய்ந்த வத்தல் 3 சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளலாம். இப்பொழுது வருத்த பொருட்களையும் தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

அடுத்து அதே கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 10 பல் வெள்ளை பூண்டுவை இணைத்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக மாறியதும் தட்டிற்கு மாற்றி விடலாம். இறுதியாக ஒரு தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து நாம் வதக்கிய பொருட்களை ஆரம்பிக்க வேண்டும்.

இந்த ஒரு தொக்கு போதும்… அசத்தல் சைடிஷ் தயார்!

இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி வெல்லம், அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். சுவையான ஆந்திரா மெஸ் களில் மட்டும் பரிமாறப்படும் ஸ்பெஷல் பருப்பு பொடி தயார்.

Exit mobile version