பாகற்காய் பிடிக்காதவர்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பாவக்காய் உள்ளி காரம் ரெசிபி! ஒருமுறை ட்ரை பண்ணுங்க…

கசப்பு சுவையின் காரணமாக பாகற்காயை பலர் ஒதுக்கினாலும் அதில் இருக்கும் மருத்துவ குணத்தின் காரணமாகவும் தனி சுவையின் காரணமாகவும் பலர் இதை விரும்பி சாப்பிடுவதும் உண்டு. நீரழிவு நோய் போன்ற பல நோய்களுக்கு பாகற்காய் அருமருந்தாகவும் இருந்து வருகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் ஆவது பாகற்காயை நம் உணவில் எடுத்து வருவதன் மூலமாக இரத்தம் சுத்திகரிப்பு நடந்து உடலில் தேவையற்ற கழிவுகள் வெளியேறி ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். குழந்தைகளுக்கு பிடிக்காத இந்த பாகற்காயை விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையானதாக செய்வதற்கான ஆந்திரா ஸ்டைல் பாவக்காய் உள்ளி காரம் ரெசிபி.. இந்த ரெசிபியை வைத்து ஒரு முறை பாகற்காய் ட்ரை பண்ணி பாருங்க மீண்டும் மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு அருமையாக இருக்கும்…

இந்த ரெசிபி செய்வதற்கான மசாலா பொருட்களை முதலில் தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு, 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 2 தேக்கரண்டி தனியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு ஓரமாக ஆறவைக்க வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அரை தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஐந்து பல் வெள்ளை பூண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு, அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் வதக்கிய இரண்டு பொருட்களையும் ஒரே மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து துவையல் பதத்திற்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது மீண்டும் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நாம் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் ஒன்றுக்கு பாதியாக வதங்கி வரும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை பகற்காயுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்பெஷலான ஸ்வீட் ரெசிபி! இனி கடை பலகாரங்களுக்கு பாய் பாய் தான்…

இப்பொழுது சற்று கூடுதலாக எண்ணெய் சேர்த்து நன்கு பாகற்காயை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் மசாலா தடவிய பாகற்காய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு வேகவைத்து இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பாவக்காய் உள்ளிக்காரன் தயார்.

இந்த பாகற்காய் ரெசிபியை தயிர்சாதம், சாம்பார், ரசம் சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

Exit mobile version