நவராத்திரி அன்று பிரசாதத்திற்கு கல்கண்டு வடை இப்படி முயற்சி செய்து பாருங்கள்!

நவராத்திரியின் பொழுது ஒன்பது நாட்களும் இல்லங்களில் கொழு வைத்து அம்மனை வழிபடுவார்கள். ஒன்பது நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதத்தை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்வது வழக்கம். மேலும் வீட்டிற்கு வருவோருக்கும் அந்த பிரசாதத்தை வழங்குவார்கள். இந்த நவராத்திரிக்கு வித்தியாசமாக கல்கண்டு வடை இப்படி முயற்சி செய்து பாருங்கள். இந்த கல்கண்டு வடை சுவையாக இருப்பதோடு செய்வதும் சுலபமானது.

சுலபமா செய்யலாம் நவராத்திரி ஸ்பெஷல் அருமையான அக்கார அடிசில்…!

கல்கண்டு வடை செய்வதற்கு இரண்டு கப் அளவு உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு ஒரு மேஜை கரண்டி அளவு பச்சரிசி சேர்த்து இரண்டையும் நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு நன்றாக ஊறிய பிறகு தண்ணீரை வடித்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். வடைக்கு மாவு அரைக்கும் பொழுது அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. வேண்டுமென்றால் தண்ணீரை லேசாக தெளித்து அரைத்துக் கொள்ளவும்.

மேலும் இந்த வடை மாவில் நாம் சீனி மற்றும் கற்கண்டு சேர்க்க இருப்பதால் மாவு மேலும் இளகி விடும். அதனால் நன்கு கெட்டியாக அரைக்கவும். மாவு நன்கு அரைபட்டதும் ஒரு கப் கற்கண்டு மற்றும் ஒரு கப் சீனியை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கடாயில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை வடை போல தட்டி சுட்டு எடுக்க வேண்டும்.

நவராத்திரி ஸ்பெஷல் நெய் மணக்கும் சுவையான சர்க்கரை பொங்கல்…!

மிதமான தீயில் வைத்து வடையை இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும். இந்த வடை மிருதுவாக சுவையாக இருக்கும். இனிப்பு சுவையுடன் இருப்பதால் இந்த வடை குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். அவ்வளவுதான் சுவையான கல்கண்டு வடை தயாராகி விட்டது.

Exit mobile version