மட்டன் வைத்து இப்படி ஒரு கிரேவியா? ஒரு முறை சாப்பிட்டு சுவைக்கு அடிமையாக்கும் மட்டன் லால் மாஸ்! ரெசிபி இதோ…

வாரம் ஒரு முறை அசைவம் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து வருவதாக பல அறிவியல் சான்றுகள் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் நாம் எடுத்துக் கொள்ளும் அசைவம் உணவுகளில் மட்டனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய இந்த மட்டன் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறை மட்டன் வைத்து இப்படி ஒரு ரெசிபியா என வாயை பிளக்கும் அளவிற்கு சுவையான மற்றும் காரசாரமான மட்டன் லால் மாஸ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு பிரியாணி இலை, , ஒரு பெரிய துண்டு பட்டை, கிராம்பு இரண்டு, காய்ந்த வத்தல் 5, ஏலக்காய் 2 சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் நான் ஒரு முதல் 500 கிராம் அளவுள்ள மட்டன் கறியை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் 20 காய்ந்த வத்தலை வெந்நீரில் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து இதனுடன் 10 பல் வெள்ளை பூண்டு, காய்ந்த வத்தல், நன்கு பழுத்த தக்காளி பழம் இரண்டு ஒன்றாக சேர்த்து நன்கு மையாக விழுந்துக்களாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதுகளை நாம் கடாயில் சேர்த்து மட்டனோடு நன்கு கிளற வேண்டும். இதில் கூடுதலாக இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மீண்டும் மூடி போட்டு மட்டுமே வேக வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தயிர், இரண்டு தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

10 நிமிடத்தில் தயாராகும் ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பச்சடி !

சிறிது நேரம் கழித்து மீண்டும் கடாயில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை சேர்த்து கிளறி கொடுத்து மீண்டும் வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளலாம். கடாயில் ஓரங்களில் எண்ணை பிரிந்து வரும் வரை சமைத்து இறக்கினால் சுவையான மட்டன் லால் மாஸ் தயார்.

Exit mobile version