பாட்டியின் கைவண்ணத்தில் உருவாகும் சில உணவு வகைகளுக்கு என்றும் மதிப்பு அதிகம் தான். கிராமங்களில் அசைவ கறி விருந்தின் போது பலவகையான அசைவ உணவுகள் சமைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில உணவுகளுக்கு என தனி சிறப்பு உண்டு. அதிலும் மட்டன் வைத்து பலவகையான ரெசிபிகள் செய்திருந்தாலும் மட்டன் முருங்கைக்காய் குழம்பிற்கு தனி சுவைதான். அது சுவையை மீண்டும் நம் நாட்டிற்கு நினைவுபடுத்தும் விதமாக மட்டன் முருங்கைக்கீரை குழம்பு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த குழம்பு சூடான சாதம், சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.
ஒரு அகலமான குக்கரில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, அண்ணாச்சி பூ சிறிதளவு, கடல்பாசி சிறிதளவு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் பொடியாக நறுக்கிய பழுத்த இரண்டு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கும் நேரத்தில் அரைத்து கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு கொதிக்க விட வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் அரை கிலோ மட்டனை சேர்த்துக் கொள்ளலாம். மசாலாவுடன் மட்டனை ஒருசேர கிளற வேண்டும்.
இப்பொழுது மட்டன் வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும். குறைந்தது ஐந்து முதல் ஏழு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம். இந்த நேரத்தில் குழம்பிற்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்ளலாம்.
மிருதுவான சப்பாத்தி, அதிரடியான சோயா குருமா எளிமையான வித்தியாசமான சுவையில் செய்வதற்கான ரெசிபி இதோ!
அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் தேங்காய், இரண்டு தேக்கரண்டி பொரிகடலை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரில் இருந்து விசில் வந்து அழுத்தம் குறைந்ததும் குக்கரை திறந்து கொள்ள வேண்டும். மட்டன் நன்கு வெந்திருப்பதை உறுதி செய்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக்காயை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளையும் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
மீண்டும் ஒருமுறை குக்கரை மூடி ஒரு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம்.. இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முருங்கைக்காய் கறி குழம்பு தயார்.