அரிசி மற்றும் பருப்பு வைத்து கமகமக்கும் வாசத்தில் அருமையான பருப்பு சாதம்!

அரிசி மற்றும் பருப்பு வைத்து எப்போதும் அரிசி பருப்பு சாதம் செய்வதற்கு பதிலாக சற்று வித்தியாசமாக சமைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிக உதவியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியும் அதேபோல சாப்பிடுவதற்கு சுவையில் குறைவே இல்லாமல் அட்டகாசமாக இருக்கும். வாங்க அரிசி மற்றும் பருப்பு வைத்து மசாலா சாதம் எளிமையான முறையில் வீட்டு பக்குவத்தில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் இரண்டு கப் அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அரை கப் துவரம் பருப்பு, கால் கப் பாசிப்பருப்பு என்பது கணக்கு. அதன்படி இரண்டு கப் அரிசி, அரை கப் துவரம்பருப்பு, கால் கப் பாசிப்பருப்பு இவை மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைக்க வேண்டும்.

இந்த அரிசி மற்றும் பருப்பு கலவையை குறைந்தது அரை மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு சிறிய துண்டி இஞ்சி 2, 5 பல் வெள்ளை பூண்டு, 10 சின்ன வெங்காயம், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி தனியா, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், துருவிய தேங்காய் ஒரு கப், மூன்று காய்ந்த வத்தல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மசாலா தயாராக உள்ளது. ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலை அரைக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி பாதியாக வதங்கி வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கைப்பிடி அளவு மல்லி இலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

இந்த சீசனில் மறக்காமல் செய்து பார்க்க வேண்டிய அல்வா ரெசிபி!

இந்த நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதுகளை சேர்த்து எண்ணெயோடு நன்கு வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நம் ஊறவைத்த அரிசியில் அளவிற்கு ஏற்ப 6 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதித்து வரும் நேரத்தில் ஊறவைத்து அரிசி இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடி விடலாம். 3 விசில்கள் வரும் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான அரிசி மற்றும் பருப்பு மசாலா சாதம் தயார்.

Exit mobile version