இந்த சீசனுக்கு மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க…. அசத்தலான மற்றும் புதுவிதமான சட்னி ரெசிபி!

இட்லி மற்றும் தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி வகைகள் செய்யாமல் சற்று விதவிதமாக சட்னி செய்யும் பொழுது சாப்பிடும் நபருக்கு சலிப்பு ஏற்படாமல் பசியை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும். மேலும் புதுவிதமான ரெசிபிகள் விரும்பி செய்பவர்களுக்கு இந்த விளக்கம் மிகவும் உதவியாக இருக்கும். வாங்க இந்த முறை சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் ஒட்டு மாங்காய் அல்லது சற்று புளிப்பான மாங்காய் வைத்து சட்னி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

முதலில் ஒட்டு மாங்காய் அல்லது சற்று புளிப்பு இருக்கும் மாங்காய்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் மாங்காய்களை அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் நன்கு பழுத்த தக்காளி பழம் இரண்டு, ஐந்து பல் வெள்ளை பூண்டு, பச்சை மிளகாய் 3 சேர்த்து மிதமான தீயில் மூடி போட்டு அப்படியே எண்ணெயில் வேக வைக்க வேண்டும். இந்த கலவை குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடம் அப்படியே மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

இப்பொழுது வேகவைத்ததில் மாங்காய் மற்றும் தக்காளி பழங்களில் தோள்களை நீக்கி சதை பகுதிகளை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் வேகவைத்த வெள்ளை பூண்டு மற்றும் பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி சக்கரை, அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து அரைக்க வேண்டும்.

20 நிமிடத்தில் குக்கரில் உதிரி உதிரியான தக்காளி பிரியாணி! ரெசிபி இதோ…

இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான மாங்காய் சட்னி தயார். இதை சூடான சாதம், தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

Exit mobile version