எப்படி இருக்குமோ… என குழப்பமே இல்லாமல் சாப்பிடத் தூண்டும் சுவையில் மாம்பழம் பட்டர் மசாலா!

பட்டர் மசாலா என்றவுடன் நம் மனதில் நினைவிற்கு வருவது பன்னீர் பட்டர் மசாலா மட்டும்தான். சேர்த்து தயார் செய்யப்படும் இந்த பன்னீர் பட்டர் மசாலாவிற்கு ரசிகர்கள் அதிகம் தான். சைவ பிரியர்களாக இருந்தாலும் சரி அசைவ பிரியர்களாக இருந்தாலும் சரி பட்டர் மசாலா வேண்டாம் என யாரும் கூற முடியாத அளவிற்கு சிறப்பாக இருக்கும். இந்த முறை அதே பட்டர் மசாலா சுவையில் மாம்பழம் வைத்து அருமையான மாம்பழம் பட்டர் மசாலா செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

இந்த பட்டர் மசாலா செய்வதற்கு நன்கு பழுத்த மாம்பழங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து தோள்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். அதாவது பன்னீர் பட்டர் மசாலாவில் பன்னீர் இருக்கும் அளவிற்கு மாம்பழ துண்டுகளை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் மைதா, மூன்று தேக்கரண்டி கான்பிளார் மாவு, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டி பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவு கலவையின் நாம் நறுக்கி வைத்திருக்கும் மாம்பழங்களை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இதை சூடான எண்ணெயில் சேர்த்து பொறித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், இரண்டு துண்டு பட்டை, இரண்டு துண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், அரை தேக்கரண்டி சீரகம், ஒரு பிரியாணி இலை, நான்கு பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, பொடியாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி பழம் வழங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு, இரண்டு காஷ்மீரில் மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து பொருட்களையும் ஒருசேர வதக்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 10 முந்திரி பருப்பு,தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயின் இரண்டு தேக்கரண்டி பட்டர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து மசாலாவில் பச்சை வாசனை செல்லும் வரை கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து இதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து மிதமான தீயில் மூடி போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து பொறித்து வைத்திருக்கும் மாம்பழங்கள், இரண்டு தேக்கரண்டி பிரஷ் கிரீம், கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது சுவையான மாம்பழம் பட்டர் மசாலா தயார்.பட்டர் மசாலா என்றவுடன் நம் மனதில் நினைவிற்கு வருவது பன்னீர் பட்டர் மசாலா மட்டும்தான். சேர்த்து தயார் செய்யப்படும் இந்த பன்னீர் பட்டர் மசாலாவிற்கு ரசிகர்கள் அதிகம் தான். சைவ பிரியர்களாக இருந்தாலும் சரி அசைவ பிரியர்களாக இருந்தாலும் சரி பட்டர் மசாலா வேண்டாம் என யாரும் கூற முடியாத அளவிற்கு சிறப்பாக இருக்கும். இந்த முறை அதே பட்டர் மசாலா சுவையில் மாம்பழம் வைத்து அருமையான மாம்பழம் பட்டர் மசாலா செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

இந்த பட்டர் மசாலா செய்வதற்கு நன்கு பழுத்த மாம்பழங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து தோள்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். அதாவது பன்னீர் பட்டர் மசாலாவில் பன்னீர் இருக்கும் அளவிற்கு மாம்பழ துண்டுகளை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் மைதா, மூன்று தேக்கரண்டி கான்பிளார் மாவு, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டி பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

பத்து நிமிடத்தில் தயாராகும் கொங்கு நாட்டு ஸ்பெஷல் அடை ரெசிபி!

இந்த மாவு கலவையின் நாம் நறுக்கி வைத்திருக்கும் மாம்பழங்களை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இதை சூடான எண்ணெயில் சேர்த்து பொறித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், இரண்டு துண்டு பட்டை, இரண்டு துண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், அரை தேக்கரண்டி சீரகம், ஒரு பிரியாணி இலை, நான்கு பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, பொடியாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி பழம் வழங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு, இரண்டு காஷ்மீரில் மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து பொருட்களையும் ஒருசேர வதக்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 10 முந்திரி பருப்பு,தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயின் இரண்டு தேக்கரண்டி பட்டர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து மசாலாவில் பச்சை வாசனை செல்லும் வரை கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து இதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து மிதமான தீயில் மூடி போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து பொறித்து வைத்திருக்கும் மாம்பழங்கள், இரண்டு தேக்கரண்டி பிரஷ் கிரீம், கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது சுவையான மாம்பழம் பட்டர் மசாலா தயார்.

Exit mobile version