இந்த ஒரு துவையல் போதும்… ஒரு சட்டி சோறும் ஒரு நொடியில் காலியாகும்! அருமையான கொத்தமல்லி துவையல் செய்வதற்கான ரெசிபி இதோ!

நம் வீட்டு சமையலறையில் விதவிதமான குழம்பு வகைகளும், காய்கறிகளும் செய்ய நேரம் இல்லாத பொழுது துவையல் ஒன்று வைத்து மூன்று வேலையும் சமாளித்த காலங்களும் உள்ளது. அப்படி நாம் செய்யும் ஒரு துவையல் இட்லி தோசை சூடான சாதம் என அனைத்திற்கும் கச்சிதமாக பொருந்தி விட்டால் போதும் வாரத்தில் மூன்று நாட்கள் ஆவது அந்தத் துவையலை நாம் மறக்காமல் செய்வது வழக்கம். மேலும் அந்த துவையல் சுவையானதாக மட்டும் அல்லாமல் மருத்துவ குணம் நிறைந்ததாக இருந்தால் அனைவருக்கும் உணவு சாப்பிட்ட திருப்தி கிடைத்துவிடும். இப்படி பல நன்மைகள் நிறைந்த கொத்தமல்லி வைத்து அருமையான துவையல் செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்.

ஒரு கட்டு கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தம் செய்து முதலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இரண்டு பச்சை மிளகாய், இரண்டு சாய்ந்த வத்தல், ஐந்து பல் வெள்ளை பூண்டு, ஐந்து முதல் பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். காரம் அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் பச்சை மிளகாய் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கைப்பிடி அளவு கருவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மல்லி இலைகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

மிதமான தீயில் மல்லி இலை நன்கு வெந்து வரும் அளவிற்கு எண்ணெயோடு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிய எலுமிச்சை பழ அளவு புளி மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக அனைத்து பொருட்களையும் நன்கு வதக்கி கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம்.

நாம் வதக்கிய பொருட்கள் அனைத்தும் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியான துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக துவையல் மிகவும் மையாக அரைக்காமல் சற்று பரபரவென அரைத்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

அசைவ விருந்து என்றாலே தலைக்கறிக்கு தனி இடம்தான்! காரசாரமான மட்டன் தலைக்கறி பிரட்டல்! ரெசிபி இதோ…..

இந்த துவையலை சூடான இட்லி, தோசை உடன் வைத்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும். மேலும் சூடான சாதத்தில் கொத்தமல்லி துவையல் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடும் பொழுது அமிர்தமாக இருக்கும். இந்த துவையல் பழைய சாதத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். ஒரு துவையல் வைத்து மூன்று மேலே உணவையும் எளிமையாக முடித்து விடலாம். மேலும் இந்த சுவையை பித்தம், தலை சுற்றி, பசியின்மை போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகவும் அமையும்.

Exit mobile version