குஜராத் ஸ்பெஷல் லாப்ஸி! ஹெல்தியான மற்றும் திட்டிப்பான இனிப்பு ரெசிபி இதோ!

விசேஷ நாட்களில் துவங்கி பந்தி சாப்பாடு வரை இனிப்பிற்கு தனி மவுசு தான். அதிலும் வழக்கமாக செய்யும் இனிப்பை விட சற்று வித்தியாசமாக செய்யும் பொழுது அனைவர் மனதையும் கவர்ந்து இனிப்பும் காலியாக மாறிவிடும். இந்த முறை குஜராத் ஸ்பெஷல் ஃபேமஸ் லாப்ஸி இனிப்பு வகை நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் உடைத்த கோதுமையை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதை தேவையான அளவு தண்ணீர் கலந்து ஒன்று இருக்கு இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கோதுமையை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் கோதுமைக்கு மூன்று கப் வீதம் தண்ணீர் என்பது அளவு.

அதன்படி மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி போட்டு ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கைப்பிடி அளவு முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, கைப்பிடி அளவு திராட்சை பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வருத்த முந்திரிப் பருப்பு மற்றும் திராட்சை, பாதாம் பருப்புகளை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்து கடாயில் மீதம் இருக்கும் அதே நெய்யில் நாம் வேகவைத்திருக்கும் போதுமையை சேர்த்துக்கொள்ளலாம். இதனுடன் ஒரு கப் கோதுமைக்கு ஒரு கப் வீதம் வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நம்ம ஊரு பூரி சாப்பிட்டு சலித்து விட்டதா… வாங்க ஜார்க்கண்ட் ஸ்பெஷல் துஸ்கா சாப்பிடலாம்!

அதன்படி ஒரு கப் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து ஒரு சேர வரும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள், அரை தேக்கரண்டி குங்குமப்பூ சேர்த்து மீண்டும் கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக நாம் நெயில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் பாதாம், திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான லாப்ஸி தயார். இந்த இனிப்பு வகை சத்து நிறைந்த கோதுமை வைத்து செய்வதன் மூலமாக இனிப்பிற்கு மட்டுமில்லாமல் சக்தி இருக்கும் பஞ்சமே இல்லாமல் சுவையாக இருக்கும்.

Exit mobile version