இரத்த சோகையை சரி செய்து, முகத்தை பளபளப்பாக மாற்றும் நேந்திர பழம் வைத்து அருமையான கொழுக்கட்டை ரெசிபி!

நேந்திரம் பழத்தில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் குறைவில்லாமல் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த சோகை சரியாகி உடல் பருமன் அதிகரித்து இயற்கையான முறையில் முகத்தில் பளபளப்புடன் பொலிவு தோன்றும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக தசை நன்கு இறுகி வலுப்பெற்று உறுதியாக தோற்றமளிக்கலாம். இப்படி ஊட்டச்சத்திற்கு குறைவே இல்லாத நேந்திரம் பழம் வைத்து வித்தியாசமான முறையில் கொழுக்கட்டை செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் நன்கு பழுத்த நேந்திர பழம் மூன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பழத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து முதல் பத்து நிமிடம் நன்கு நீராவியில் வேக வைக்க வேண்டும்.

அப்படி நீராவியில் நன்கு வெந்த நேந்திர பழத்தை நன்கு மசித்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். கட்டிகள் விழாத வண்ணம் நன்கு மாவு போல மசித்துக்கொள்ள வேண்டும். மசித்த நேந்திர பழத்துடன் ஒரு கப் பச்சரிசி மாவு, இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

மாவு பிசையும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது கலந்த மாவை அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிடலாம். கொழுக்கட்டை உள்ளே வைப்பதற்கான பூரணத்தை தயார் செய்து கொள்ள வேண்டும்.

அதற்காக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். ஒரு கப் தேங்காய் துருவலுக்கு அரை கப் வெல்லம் கரைசல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

வெல்லம் நன்கு இறுகி கெட்டியாக வரும் வரை கிளற வேண்டும். வெல்லம் மற்றும் தேங்காய்ப்பூ கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் நான்கு முதல் ஐந்து ஏலக்காய்களை இடித்து வாசனைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்தால் இனிப்பு சுவை சற்று கூடுதலாக இருக்கும்.

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக நீர்ச்சத்து நிறைந்த சுரக்காய் வைத்து அருமையான பாயாசம் செய்வதற்கான ரெசிபி இதோ…

இப்பொழுது பூரணம் தயாராக மாறியுள்ளது. நேந்திர பல மாவை வாழை இலையில் உருண்டையாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு அளவிற்கு சற்று பெரிதாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மேல் பக்கம் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை வட்ட வடிவில் நன்கு பரப்பிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் மேல் பக்கம் அதே அளவு நேந்திர பல மாவை உருண்டையாக தட்டி மூடி போல மூடி விழ வேண்டும். இப்படி மேலும் மேலும் பூரணம் வைத்து அடுத்தடுத்து வாழை இலையில் கொழுக்கட்டையை தயார் செய்ய வேண்டும். இப்பொழுது இந்த கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான நேந்திர பல கொழுக்கட்டை தயார். இந்த கொழுக்கட்டை இனிப்பு சற்று அதிகமானதாகவும் சுவை நிறைந்ததாகவும் இருப்பதால் குழந்தைகள் தாராளமாக சாப்பிடலாம்.

Exit mobile version