மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில் காரசாரமான கொள்ளு குழம்பு! ரெசிபி இதோ…

வீடுகளில் அசைவம் சமைக்க முடியாத நேரங்களில் சைவத்தில் அதேபோன்ற சுவையில் செய்து சமாளிப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த முறை மட்டன் சாப்பிட முடியாத சமயங்களில் கொள்ளு பயிறு வைத்து அருமையான மட்டன் சுகையில் குழம்பு செய்வதற்கான ரெசிபியை பார்க்க போகிறோம்.. அதுவும் இந்த முறை கொள்ளு முளைகட்டி பயிராக இருக்கும் பொழுது சமைப்பதற்கான ரெசிபி இந்த தொகுப்பில் உள்ளது. வாங்க முளைகட்டிய கொள்ளு பயிறு குழம்பு செய்வதற்கான ரெசிபியை முழுமையாக பார்க்கலாம்…

ஒரு கப் கொள்ளு பயிரை நன்கு கழுவி சுத்தம் செய்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 12 மணி நேரம் கழித்து நன்கு தண்ணீரை வடிகட்டி வெள்ளை துணியில் கட்டி மீண்டும் ஒரு 12 மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த 12 மணி நேரத்தில் நன்கு ஊறி இருக்கும் கொள்ளு பயிறு முளை விட துவங்கும். இப்படித்தான் நமக்கு முளைகட்டிய கொள்ளு பயிறு கிடைத்திருக்கும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஐந்து பல் வெள்ளை பூண்டு, 10 முதல் 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு சிறிய துண்டு பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்க்க நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இதில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக மூன்று தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம். அப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து வையாக விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, 5 சின்ன வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

சாதம், தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் அட்டகாசமாக பொருந்தும் விதத்தில் காரசாரமான காளான் முட்டை கிரேவி!

இதனுடன் தேவையான அளவு உப்பு, ஊற வைத்திருக்கும் முளைகட்டிய கொள்ளு பயிறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம்.

மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முளைகட்டிய கொள்ளு பயிறு குழம்பு தயார்.

Exit mobile version