குழம்பு ஏதும் வேண்டாம்….. இந்த ஒரு பொடி போதும்! சுவையான மற்றும் சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொடி!

கருப்பு கவுனி அரிசி உடலுக்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடியது. இதை அப்படியே மாவாக அரைத்து இட்லி தோசை என நம் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடலாம். இந்த முறை சற்று வித்தியாசமாக இந்த கருப்பு கவுனி அரிசி வைத்து எளிமையான முறையில் பல நாள் ஆனாலும் கெட்டுப் போகாத பொடி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 50 கிராம் அளவு கருப்பு கவுனி அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் அரிசியை நன்கு வறுக்க வேண்டும். அரிசியிலிருந்து வாசனை வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து மற்றொரு பாத்திரத்திற்கு அரிசியை மாற்றிக் கொள்ளலாம்.

அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வறுத்த இந்த பொருட்களையும் அரிசியுடன் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் மூன்று பல் வெள்ளை பூண்டுவை தட்டி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வதக்கிய பூண்டையும் அரிசியுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

நல்ல காரசாரமாக ரோட்டு கடை ஸ்டைல் மசாலா முட்டை தோசை! ரெசிபி இதோ….

இப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் அனைத்தும் சூடு ஆறும் வரை காத்திருக்கவும். அதன் பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி கல்லுப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது சுவையான கருப்பு கவுனி அரிசி பொடி தயார். இதை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் கலந்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். மேலும் இதை இட்லியுடன் மற்றும் தோசையுடன் நல்லெண்ணெய் சேர்த்தும் சாப்பிடலாம். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கருப்பு கவுனி கலவை சாதமாகவும் செய்து கொடுக்கலாம்.

Exit mobile version