காராமணி வைத்து எப்படி சமைப்பது என தெரியவில்லையா? வாங்க சுவையான காராமணி வேர்க்கடலை பொரியல் ரெசிபி!

சந்தைகளில் ஒரு சில காய்கறிகளை பார்க்கும் பொழுது இதை வைத்து எப்படி சமைப்பது என்ன விதமான சமையல் செய்வது என தெரியாமல் குழபத்தில் அந்த காயை நம் வீட்டிற்கு வாங்காமலேயே வந்து விடுவோம். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் காராமணி. இதை வைத்து எப்படி சமைப்பது சமைத்தால் எப்படி இருக்கும் என்ற குழப்பத்தில் பலர் இதை வாங்க மறுத்து வருகின்றனர். ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்த இந்த காராமணி வைத்து அருமையான காராமணி வேர்க்கடலை பொரியல் சேர்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் எளிமையாக பார்க்கலாம் வாங்க…

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி தனியா, அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்த நல்ல வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் காரத்திற்கு ஏற்ப மூன்று காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு சற்று அதிகமாக வேர்க்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ளலாம். இறுதியாக ஒரு தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து நன்கு வருத்து அடுப்பை அணைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் வருத்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து கொள்ளலாம். அதே அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு கப் நறுக்கி வைத்திருக்கும் கராமணியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெயோடு சேர்த்து ஒரு முறை காராமணியை கிளறி எடுத்த பிறகு அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும். இதில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் காய் வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

தீபாவளி சிறப்பாக அசத்தல் அசைவ விருந்து… கோயம்புத்தூர் ஸ்பெஷல் அங்கணன் பிரியாணி நம்ம வீட்டிலே செய்யலாம் வாங்க…

பத்து நிமிடம் கழித்து காராமணி வெந்து உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்த பிறகு நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்துக் கொள்ளலாம். மசாலா காராமணியுடன் ஒரு சேரும் வரை நன்கு கிளரி கொடுத்து இறக்கினால் சுவையான காராமணி வேர்க்கடலை பொரியல் தயார்.

இந்த பொரியல் சூடான சாதம் முதல் சாம்பார் சாதம், ரசம் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் என அனைத்து கலவை சாதன்களுக்கும் சிறந்த பொருத்தமாக இருக்கும்.

Exit mobile version