பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ரெசிபியாக சத்தான மற்றும் சுவை மிகுந்த கடலை புட்டு!

பள்ளி செல்லும் குழந்தைகள் வீடு திரும்பியதும் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது வழக்கமான ஒன்று. அப்படி சாப்பிடும் ஸ்னாக்ஸ் கடைகளில் பெரும்பாலும் வாங்காமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் சத்தானதாகவும் சுவையானதாகவும் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு நல்ல வளர்ச்சி மாற்றம் ஏற்படும் முறை சுவை மற்றும் சத்து நிறைந்த கடலை புட்டு வீட்டில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மாவுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து நீராவியில் 5 முதல் 8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் மற்றொரு கடாயில் அரை தேக்கரண்டி மிளகு, ஒரு சிறிய துண்டு சுக்கு, மூன்று ஏலக்காய் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் வேர்க்கடலை, நாம் வறுத்த மிளகு சுக்கு மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதை மிக்ஸி ஜாரின் நாம் வேகவைத்த அரிசி மாவையும் சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளலாம்.

லஞ்ச் பாக்ஸ்க்கு லெமன் சாதத்திற்கு பதிலாக ஒரு முறை இந்த காரசாரமான மசாலா லெமன் சாதம் ட்ரை பண்ணுங்க..

இப்பொழுது அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதனுடன் அரை கப் அச்சு வெல்லத்தை பொடியாக தூள் செய்து சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மாவுடன் அச்சு வளத்தை சேர்த்து ஒரு சிறப்பு செய்து கொள்ள வேண்டும்.

இறுதியாக கையில் சிறிதளவு நெய் சேர்த்து நாம் செய்த மாவுகளை உருண்டையாக உருட்டி எடுத்துக் கொண்டால் சுவையான கடலை புட்டு தயார். இனிப்பு பலகாரமான கடலை புட்டு சாப்பிடுவதற்கு சுவையானதாக மட்டும் இல்லாமல் சற்று நிறைந்ததாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Exit mobile version