வெள்ளைப் பணியாரம் செட்டிநாட்டில் பிரசித்தி பெற்ற ஒரு பலகார வகையாகும். பலகாரங்களுக்கு புகழ் பெற்ற செட்டிநாட்டில் மிகவும் பிரபலமான இந்த வெள்ளை பணியாரம் காலை மாலை உணவாக எடுத்துக்கொள்ள உகந்ததாக இருக்கும். இந்த வெள்ளைப் பணியாரம் அனைத்து முக்கிய நிகழ்விலும் செட்டிநாட்டுப் பகுதிகளில் கட்டாயம் இடம்பிடித்து விடவும். இதற்கான மாவினை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பணியார மாவு அப்பொழுதே அரைத்து செய்ய வேண்டும்.
அடடே என்ன சுவை! சுவையான மாலை நேர சிற்றுண்டி மசாலா பணியாரம்…!
வெள்ளைப் பணியாரம் தயார் செய்ய இரண்டு கப் பச்சரிசி, கால் கப் உளுந்தினை நன்கு அலசி ஒன்றரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவை நன்கு ஊறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிரைண்டரில் மை போல ஆட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளைப் பணியாரம் நன்கு வருவதற்கு நாம் பணியாரம் ஊற்றும் கரண்டியும் எண்ணெய் காய வைக்கும் வாணலியும் மிகவும் அவசியம். அடி கனமான ஏந்தலான பாத்திரத்தை இந்த பணியாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் கரண்டியும் சற்று ஏந்தலாக இருக்க வேண்டும்.
மாவு ஆட்டிய உடனே வெள்ளைப் பணியாரம் ஊற்ற வேண்டும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு பணியாரமாக தான் ஊற்ற வேண்டும். பணியாரம் ஊற்றிய பின்னர் ஓரங்கள் நன்கு வெந்து வந்ததும் சுற்றியுள்ள எண்ணெயை பணியாரம் மீது ஊற்றி விடவும். பின் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். மிதமான தீயிலேயே இதனை ஊற்றி எடுக்க வேண்டும். பணியாரம் நன்கு மிருதுவாக வருவதற்கு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம்.
வாவ்…! மாலை நேர காபி அல்லது டீயுடன் சூடாக சாப்பிட சூப்பரான ஸ்னாக்ஸ்.. பன்னீர் கட்லட்!
வெள்ளைப் பணியாரம் சிவந்து விடாமல் வெண்மை நிறத்திலேயே இருக்கும் பொழுதே எடுத்து விட வேண்டும். இதனை தக்காளி வரமிளகாய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் பரிமாறலாம்.
அவ்வளவுதான் அருமையான வெள்ளை பணியாரம் தயார்!