இனி பிஸ்கட் கடைகளில் வாங்க வேண்டாம்.. இது தெரிந்தால் வீட்டிலேயே செய்வீர்கள்!

பிஸ்கட் பலருக்கும் பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் வகையாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதை விரும்பி சாப்பிடுவர். சிலருக்கு மாலை நேரத்தில் தேநீர் குடிக்க வேண்டும் என்றால் அது பிஸ்கட் இல்லாமல் நிறைவடையாது. சாதாரண பிஸ்கட் தொடங்கி நட்ஸ் கலந்த பிஸ்கட், கிரீம் பிஸ்கட் என பிஸ்கட்களில் பல்வேறு வகைகள் சந்தைகளில் கிடைக்கிறது. என்னதான் கடைகளில் விதவிதமாய் பிஸ்கட் கிடைத்தாலும் நாம் விரும்பும் பிஸ்கட்டை நாமே வீட்டில் தயாரிக்க முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்பொழுது முந்திரிகள் நிறைந்த பிஸ்கட்டை நாமே வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இவ்வளவு டேஸ்டியான கோதுமை அல்வாவா… இதை செஞ்சு பாருங்க இனி கடைகளில் அல்வா வாங்க மாட்டீங்க…!

இந்த பிஸ்கட் தயாரிக்க கால் கப் முந்திரி பருப்பினை மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை கப் அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். இரண்டு மேசை கரண்டி அளவு பால் பவுடரையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். ஒரு சிட்டிகை அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை அளவு பேக்கிங் பவுடர் சேர்த்து இதை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் நன்கு அடித்துக் கொள்ளவும்.

கால் கப் அளவு வெண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வெண்ணை அறை வெப்ப நிலையில் மிருதுவாக இருக்க வேண்டும். கெட்டியாக இருக்கக் கூடாது மிருதுவாக இருக்கும் இந்த வெண்ணையை நன்கு கிரீம் போன்ற பதத்திற்கு அடித்துக் கொள்ளவும். இப்பொழுது இந்த வெண்ணெயுடன் ஒன்றே கால் கப் அளவு மைதா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

இப்பொழுது ஏற்கனவே பொடித்து வைத்துள்ளதை இதனுடன் சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பெரிய பரப்பில் மாவினை தூவி பிசைந்து வைத்திருக்கும் இந்த மாவை பரவலாக தேய்த்துக் கொள்ளுங்கள். அதன் மீது தேவையான அளவு முந்திரிகளை பொடிப்பொடியாக நறுக்கி இதில் தூவி விட்டு நன்கு அழுத்தி தேய்த்துக் கொள்ளவும்.

வாவ்…! மாலை நேர காபி அல்லது டீயுடன் சூடாக சாப்பிட சூப்பரான ஸ்னாக்ஸ்.. பன்னீர் கட்லட்!

இப்பொழுது இதனை விருப்பமான வடிவில் கட் செய்து கொள்ளவும். கட் செய்த மாவில் விருப்பமான டிசைனை வரைந்து கொள்ளலாம். இப்பொழுது இதனை ஓவனில் வைப்பது என்றால் 350 டிகிரி ஃபாரன் கேட்டில் 10 முதல் 12 நிமிடங்கள் வைத்து எடுத்து விடவும். குக்கரில் வைப்பது என்றால் இட்லி குக்கரில் செய்யலாம். குக்கரில் சிறிது உப்பை அடிப்பகுதியில் பரப்பி விட்டு ஐந்து நிமிடங்கள் முன்பே சூடு செய்து அதன் பின் இட்லி தட்டில் நெய் தடவி இந்த குக்கிகளை வைத்து அடுப்பில் 18 முதல் 20 நிமிடங்கள் வைத்து எடுத்தால் அருமையான பிஸ்கட் தயாராகிவிடும்.

Exit mobile version